வெள்ளி, 11 டிசம்பர், 2015

அப்ரூவராக மாற ஹெட்லி முடிவு...மும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்:

மும்பை: தனக்கு மன்னிப்பு அளித்தால் மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாற தயார் என பயங்கரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
மும்பையில், 2008ல்,நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, நடத்திய தாக்குதலில், 160க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெ ட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார், அமெரிக்க கோர்ட் ஹெ ட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்


இந்த வழக்கு தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை கோர்ட்டில் ஹெ ட்லி ஆஜரானார், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிஹாம் கூறியதாவது, இந்த வழக்கில் அமெரிக்க கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஹெட்லி, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார், தனக்கு மன்னிப்பு வழங்கினால், அப்ரூவராக மாறத்தயார் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து கோர்ட் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீசை சந்தித்தார். இதையடுத்து இந்தியா-பாக் நல்லுறவு மீண்டும் மலர்ந்து வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம் மற்றும் மும்பை தாக்குதல் வழக்கினை விரைந்து முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் ஹெ ட்லி அதிரடியாக அப்ரூவராக மாற முடிவு செய்திருப்பது, வழக்கின் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது  தினமலர்.com

கருத்துகள் இல்லை: