வியாழன், 10 டிசம்பர், 2015

நடிகன் சல்மான் கான் விடுதலை..போதையில் காரை படுத்திருந்தவர் மீது ஒட்டி கொன்ற வழக்கு

மும்பை நடைபாதைவாசி ஒருவர் மீது தனது காரை தாறுமாறாக ஓட்டி கொன்றார் என்ற குற்றச்சாட்டில், ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம், சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட ஐந்தாண்டு சிறைத் தண்டனையை , மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. விடுதலை -- சல்மான் கானுக்கு 2002ம் ஆண்டு நடந்த இந்த கார் விபத்தில் சல்மானுக்கு கடந்த மே மாதம் இந்த சிறைத் தண்டனை வழங்கி கீழ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த சம்பவத்தில் தனது டொயோட்டா காரை வேகமாக ஓட்டி நடைபாதையில் ஏற்றியதில், ஒருவர்
கொல்லப்பட்டார், மேலும் நால்வர் காயமடைந்தனர்.
தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்று தீர்ப்பளித்திருந்தார்.
ஆனால் அந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே, சல்மான் கான் ஜாமீனில் இருக்கிறார். சட்டம் தன் கடமையை  எப்படி  செய்திருக்கிறது ?  மக்கள் கைகொட்டி சிரிப்பார்களே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு சினிமா பணக்காரனுக்கு வளைந்து கொடுத்து  நொறுங்கி போய் இருக்கிறது. 

அவரது மேல்முறையீடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணையில் போலிஸ் அதிகாரி ஒருவர் அளித்த சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்று கூறினார். அந்த போலிஸ் அதிகாரி விசாரணைக்குப் பின் இறந்துவிட்டார் .
மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்கப்படும் நாளான இன்று, நீதிமன்றத்துக்கு சல்மான் கான் முதலில் வரவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அவர் நீதிமன்றத்தில் இருந்தால்தான், தீர்ப்பு வழங்கப்படமுடியும் என்று நீதிபதி திட்டவட்டமாகக் கூறிய நிலையில், அவசர அவசரமாக சல்மான் கான் நீதிமன்றத்துக்கு விரைந்தார்.
அதன் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி அனில் ராமச்சந்திர ஜோஷி, சல்மான் கானின் மேல் முறையீடு அனுமதிக்கப்படுவதாகவும், கீழ் நீதிமன்ற தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
தீர்ப்பைக் கேட்டவுடன், தனது குடும்பத்தினர் புடைசூழ நீதிமன்றத்தில் இருந்த சல்மான் கான் கதறி அழுததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
கீழ் நீதிமன்ற விசாரணையின்போது, காரை தனது டிரைவர்தான் ஓட்டியதாகவும், தான் ஓட்டவில்லை என்றும் சல்மான் கான் கூறினார். ஆனால் விசாரணை செய்த நீதிபதி, சல்மான் கான் தான் காரை ஒட்டினார், அவர் மது அருந்தியிருந்தார் என்றும் கூறினார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்யும் என்று செய்திகள் கூறுகின்றன.
சுமார் 80 படங்களுக்கு மேல் நடித்துள்ள சல்மான் கான் ஹிந்தித் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். bbc.tamil.com

கருத்துகள் இல்லை: