1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட
ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித்
மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி
ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அங்கு பேஸ்புக் சமூக
வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களது தூக்கு தண்டனை
காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதை
தவிர்க்க அங்கு பேஸ்புக்கி்ற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த
தடையை இன்று நீக்கியிருப்பதாக வங்காளதேச தொலைதொடர்புத்துறை மந்திரி தரானா
ஹலீம் தெரிவித்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றிற்கு
விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை. ஏற்கனவே, அங்கு 2012-2013-ம்
ஆண்டுகளில் 260 நாட்கள் வரை யூடியூப் வலைத்தளத்திற்கு தடை
விதிக்கப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக