எண்ணற்ற ஏன் இணையற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கிறார்களே. தெரிந்த வரை
அதில் ஒரு பிராமணரைக் கூடக் காணோமே? அடுத்து தவில் காரர்களைப் பற்றி
இன்னும் சொல்லவே வேண்டாம். பிராமணர்கள் இல்லை என்று சத்தியமே செய்யலாம்.
இதைப் போலவே மற்றொரு கேள்வி : இதில் மதுரை சோமு எந்த வகை? அவருக்காக யார்
புண்ணியம் செய்திருக்கிறார்கள், போன பிறவியில்? ஷேக் சின்னமெளலானா
சாகிப்பிற்கு இங்கு என்ன வேலை? அவர் முஸ்லிம் வேறு அல்லவா? நாதசுவரத்தை
அவ்வளவு மென்மையாக வாசிக்க அவருக்கு யார் வரமளித்தது?
கர்நாடக சங்கீதம் கடவுளைத் தவிர்த்து மற்ற ”தீம்களை” ஆராய்வதே இல்லைதான். ஹிந்துஸ்தானி இசையில் இயற்கையைப் பாடுவார்கள். காதலும் இருக்கும். கர்நாடக சங்கீதத்தின் கதையே வேறு. இதனால் இந்த சங்கீதமே சாமி வழிபாடோ என்று எண்ணி விடத் தோன்றுகிறது.
ஒரு பத்திரிகையில் படித்தது நினைவிற்கு வருகிறது – “அங்கெல்லாம் (மற்ற நாடுகளில்) இசையில் ஒரு பகுதி வேண்டுமானால், கடவுளைப் பாடுவதும், தேவதூதர்களை வழிபடப் பயன்படுத்துவதும், மதத்திற்காகவுமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் இசைக்கருவிகளைக் கொண்டு மட்டுமே இசைக்கோவைகளை உருவாக்கி அது இசைக்கப்படும்போது மனிதரின் உள்ளத்தை ஈர்த்து, அமைதியை இதமாகத் தரும் அருமருந்தாக இசை இருக்கிறது.” என அக்கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஒரு சர்ச்சைகுடிய விஷயம் – இது ஏதோ பிராமணர்களுக்கு உரிய இசை என்று ஆகி விட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு இது வராது. பிராமணர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். இதனால் இது அவர்களுக்கு ஒரு வரமாக அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அதை அண்ட வேண்டாம். உத்தரகளம் என்ற மலையாள டாக்குமெண்டரிப் படம் இந்தக் கருத்தை முன் வைக்கிறது
(முன்னணி இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை பிராமணர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்படவேண்டும் எனக் கலகக் குரல் எழுப்பி வருகிறார். ஒரு நூலே எழுதிவிட்டார். கர்நாடக இசைக் கச்சேரிகளைக் கேட்க வருபவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே. இப்படி சநாதனத்தை கிருஷ்ணா கண்டித்தும் அவருடைய கச்சேரிகளை புறக்கணிக்கவேண்டும் என்று எவரும் அறிக்கைவிடவில்லை. அதே நேரம் அவருடன் முரண்படும் எவரும் பகிரங்கமாக அவருடன் மோதவும் முன்வரவில்லை. இந்நிலையில் குறிப்பிடத்தகுந்த இசை விமர்சகர் சிவகுமார் கிருஷ்ணாவின் நிலை பற்றி சில கருத்துக்களை இங்கே முன்வைக்கிறார்.)
டி.எம்.கிருஷ்ணாவிற்கு இனிமையான குரல். பாடுவதிலும் வல்லவர். இப்பொழுது பேசவும் ஆரம்பித்திருக்கிறார். பேச்சு அவ்வளவு இனிமையானதாக இல்லை. எல்லோரையும் வம்புக்கு இழுக்கிறது.
ஒரு தலித்திற்கு மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது கிடைக்குமானால் தன் வாழ்வில் அது ஒரு பொன்னாளாக அமையும் என்கிறார். நடைமுறையில் பழக்கப்பட்டுப் போன எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். உதாரணத்திற்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஒரு கர்நாடக சங்கீத வித்வானாக பரிமளிக்க முடியுமா? முடியாது என்கிறார். இதை மாற்ற வேண்டும் என்ற குரல் வீரியம் அவரிடம் இருக்கிறது. எழுப்பியிருக்கும் கேள்விகள் மதம் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களையும் கர்நாடக சங்கீதத்தைப் பற்றியதுமாக இருக்கிறது.
உண்மைதான். ஹிந்துஸ்தானி இசையைப் போல நமது தென்னிந்திய கர்நாடக சங்கீதம் கடவுளைத் தவிர்த்து மற்ற ”தீம்களை” ஆராய்வதே இல்லைதான். ஹிந்துஸ்தானி இசையில் இயற்கையைப் பாடுவார்கள். காதலும் இருக்கும். கர்நாடக சங்கீதத்தின் கதையே வேறு. இதனால் இந்த சங்கீதமே சாமி வழிபாடோ என்று எண்ணி விடத் தோன்றுகிறது.

மேலும் ஒரு சர்ச்சைகுடிய விஷயம் – இது ஏதோ பிராமணர்களுக்கு உரிய இசை என்று ஆகி விட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு இது வராது. பிராமணர்கள் போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள். இதனால் இது அவர்களுக்கு ஒரு வரமாக அளிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அதை அண்ட வேண்டாம். உத்தரகளம் என்ற மலையாள டாக்குமெண்டரிப் படம் இந்தக் கருத்தை முன் வைக்கிறது :“For those who have never pondered on the workings of caste in music, the documentary throws open some interesting perspectives: ’how the non-classical lower-caste music (what mostly goes as ‘folk’ music) is considered a special ‘sub-heading’ of music, separate and different from ‘pure’ (read upper caste) music. It also shows how dalit practitioners of ‘classical’ forms of music are systematically excluded from the domain of acceptability and respectability – by ousting them from the hallowed centres of learning of the performing arts – the kalamandalam, from the hallowed venue of performances – the state youth festival (incidentally, one that claims to be the largest in Asia), and from the domain of fame and talent. It makes you wonder about what constitutes musical ‘talent’ and ‘merit’.
இசையில் சாதியின் பங்கைப் பற்றி அதிகம் சிந்திக்காதவர்களுக்கு இந்த ஆவணப்படம் அர்ப்பணம். செவ்வியல் சங்கீதமல்லாத கீழ் சாதியினரின் இசை நாட்டுப்புற இசையாகக் கருதப்படுகிறது. செவ்வியலிசையினை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தலித்துக்களுக்கு மறுக்கப்படுகிறது. தவறி எவரேனும் கற்றுக்கொண்டாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை
இவ்வாறு கூரை மீது நின்று கூவுபவர்களிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்கிறோம்: எண்ணற்ற ஏன் இணையற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் இருக்கிறார்களே. தெரிந்த வரை அதில் ஒரு பிராமணரைக் கூடக் காணோமே? அடுத்து தவில் காரர்களைப் பற்றி இன்னும் சொல்லவே வேண்டாம். பிராமணர்கள் இல்லை என்று சத்தியமே செய்யலாம். இதைப் போலவே மற்றொரு கேள்வி : இதில் மதுரை சோமு எந்த வகை? அவருக்காக யார் புண்ணியம் செய்திருக்கிறார்கள், போன பிறவியில்? ஷேக் சின்னமெளலானா சாகிப்பிற்கு இங்கு என்ன வேலை? அவர் முஸ்லிம் வேறு அல்லவா? நாதசுவரத்தை அவ்வளவு மென்மையாக வாசிக்க அவருக்கு யார் வரமளித்தது? (அவர் பட்டை பட்டையாக விபூதி அணிந்து கொண்டுதான் மேடைக்கு வருவார் என்பது வேறு விஷயம்)
“ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை” இவ்வாறு ஒரு நேர்முகத்தில் கூறியுள்ள இதே கிருஷ்ணா, எவ்வாறு ஒருவனுடைய சூழல்தான் அவனை உருவாக்குவதில் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் யதார்த்தம்தான் என்ன? நாம் பலரைப் பற்றி அறிமுகம் செய்யும் பொழுது எ ப்ராஹ்மின் பை பெர்த், எ தலித் பை பெர்த் (அவர் பிறப்பால் பிராமணர்/தலித்) என்று தானே உரைக்கிறோம். நான் எங்கு சென்று பிறக்கிறேன் எனபது என் கையிலா இருக்கிறது? கர்நாடக இசையைப் பொறுத்த வரையில் தலித் குடும்பங்களுக்கு இந்த இசை சென்றடையும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு எள்ளளவும் இல்லை. இது குறித்து எந்தவித முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளன என்பதையும் பார்க்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளிகளில் (எங்கள் வீட்டின் பின் புறம் ஒரு பள்ளி இருக்கிறது) இசை வகுப்பு நடத்தப் படுகிறது. அங்கு கற்கும் பலரிடம் கேட்டதில் அது ஒரு “போர்” என்றுதான் “பசங்க” சொல்றாங்க. ஏன் தெரியுமா? டி எம் எஸ், சீர்காழி போன்றோரின் பாடல்களைக் கற்பிக்காமல் வகுப்பில் முறையான கீர்த்தனைகளை கற்பிக்கிறார்கள். இது சரியல்ல என்பதே எனது வாதம். இவை தமிழ்க் கீர்த்தனைகளாக இருந்தாலும் சரி.
அதே நேர்முகத்தில் தொடர்ந்து பேசியுள்ள கிருஷ்ணா இவ்வாறும் கூறியிருக்கிறார்: ”தலித் சமூகம் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தையும் சேர்ந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நானும் என்னுடன் ஒத்த சிந்தனையுள்ள இசைக்கலைஞர்களும் சங்கீதம் கற்றுத் தருவதைப் பற்றிய திட்டத்தில் இருக்கிறோம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகள் மூன்றில் கர்நாடக சங்கீதப் பயிற்சிகள் அளிக்க நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன்.” இது முதலில் சாத்தியமாகுமா? இதற்கு முதலில் ரசனையை வளர்க்க வேண்டாமா?
ஆலயங்களில் தேவாரப்பாடல்கள் இசைக்கின்றனர் பிராமணரல்லாத ஓதுவார்கள். அம்மரபே அருகிக்கொண்டிருக்கிறது. இன்னமும் விடாமல் இசைக்கும் ஓதுவார்களுக்கு என்ன பெரிய மதிப்பு வாழ்கிறது?
ஒரு காலத்தில் மனதிற்கு மென்மையான (இதில் உச்ச கட்டம் பி பி சீனிவாஸ் அவர்களின் காலங்களில் அவள் வசந்தம்) சினிமா பாடல்களையே நாம் கேட்டு வளர்ந்திருக்கிறோம். அதற்கும் முன்போ கர்நாடக சங்கீதப் பாடல்களே படங்களில் ஒலித்தன. (“முகத்தில் முகம் பார்க்கலாம்” ”ஆடாத மனமும் உண்டோ”, சிவகவியில் வரும் பாடல்கள், எம்கேடியின் பாடல்கள் , இன்னும் எத்தனையோ) இப்பொழுது படங்களில் வருவது சங்கீதமா என்பதே ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது. இதற்கு நேர் எதிரிடையான ஒரு போக்கினை உருவாக்க முடியுமா? இதெல்லாம் மேல்தட்டு சங்கீதம் என்று இவற்றை உதறித் தள்ளி விட மாட்டார்களா? அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிசைத் துறைத் தலைவராக இருந்த அபயாம்பிகா, அப்பகுதி கிராம மக்களிடம் கர்நாடக பாணி தமிழிசையில் ஆர்வம் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டபோது, இந்தத் தன்னன்னா பாட்டெல்லாம் நமக்கு எதுக்குங்க என்று சொல்வார்களாம்.
தவிரவும் காதில் செல் போனில் சங்கீதம் கேட்பவர்களையெல்லாம் இசையறிந்த பிறவிகளாக்க இயலுமா? இவர்களை கிருஷ்ணா கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளாரா? இதே நிலைதான் நல்ல படங்களைப் பற்றிய மக்கள் ரசனையும். ஒரு ”மேஜர் சந்திரகாந்த்” இன்றைக்கு ஹிட் ஆகுமா?
“சாஸ்திரிய சங்கீதமும் – அதை நான் கலை இசை என்றே குறிப்பிட விரும்புகிறேன் – ஒரு கலைஞரின் கற்பனையைச் சார்ந்தத்தேயொழிய அவருடைய சாதியைச் சார்ந்தது இல்லை. கோயிலும் சம்ஸ்கிருதப் பின்னணியுள்ள குடும்பங்களும் அவர்களுடைய உறவினர்களும் என்று வரலாற்றுப் பின்புலமுள்ள கர்நாடக சங்கீதம் அவர்களுடைய சொத்தாகிவிட்டது. ஒன்றின் சொத்தாக இருப்பதென்பதும் ஒன்றால் சிறைப்படுத்தப்பட்டிருப்பதென்பதும் வேறுவேறு. போற்றிப் பாதுகாக்கப்பட்டு பரந்த அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டிய திறமை என்பதைத் தாண்டி என்னுடைய கலை வடிவம் ஒருவகையில் ஒரு குழுவின் சொத்துரிமையாக, சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கொடுக்கக்கூடியதாக, கிட்டத்தட்ட காப்புரிமைக்கு உட்பட்டதுபோல், ஆகிவிட்டது. இந்தக் கலையின் வாரிசுகளாக இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் இந்தக் கலையைத் தங்களுடைய தனியுடைமையாகக் கருதாமல் பொது வுடமையாகக் கருதி பகிர்ந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். என்னுடைய கலை வடிவம் என்பது என்னுடைய உயிர்மூச்சு, அது ஒரு அனுபவம். அது மந்திர உச்சாடனம்போல் இறுகிப்போய்விடக் கூடாது.” இவ்வாறு கிருஷ்ணா கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த கருத்தே. ஆனால் இதே கிருஷ்ணா இவற்றில் எவ்வளவு சீரியஸாக இருக்கிறார் என்பதே நம் கவலை.
இப்படிப்பட்ட ”தீவிரவாத” கலைஞர் ஒருவர் தான் நடத்தும் கச்சேரிகளில் வெறும் மாற்றத்திற்காக முதலில் முறையாகப் பாட வேண்டிய வர்ணத்தை நடுவில் புகுத்துவது சரியா? இது சற்று சின்னத்தனமாகத் தோன்றுகிறது. ராகம் தானம் பல்லவி என்று ஒரு முறை இருக்கிறது. இதில் பல்லவி முடிந்த பின் தான் மிருதங்கம் வாசிப்பவருக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்படும். இடையில் தானம் என்ற சாஹித்தியமே இல்லாத ஒரு அழகு மிளிரும் அமைப்பிற்குப் பின்னர் தனி ஆவர்த்தனத்தை வாசிக்கச் சொல்வது என்ன விதத்தில் சரியாகும்? இதைச் செய்வது டி எம் கிருஷ்ணா! என்ன சாதிக்கப் பார்க்கிறார் இவர்? மாற்றத்திற்காக மாற்றம் என்பது எவ்வளவு நாட்கள் நிலைத்து நிற்க முடியும். ஒரு நீண்ட புத்தகத்தை எழுதியுள்ள கிருஷ்ணா நிறையப் படித்திருப்பார். இதை அவர் முதலில் படித்திருக்க வேண்டும் “ஒவ்வொரு கலையின் வெளிப்பாட்டிற்கும் அவற்றிற்கே உரித்தான பாரம்பரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த சம்பிரதாய முறைகளைக் கட்டிக் காக்க வேண்டுமா என்பதை நீங்களோ நானோ முடிவு செய்ய இயலாது.”
இங்கே இன்று கர்நாடக இசைத்தளத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? கலை மதத்தில் ஊறிக் கிடக்கிறது – சொந்தக் காலில் அதற்கு நிற்கத் தகுதியிருந்தும். ”கலைக்கு கலை என்ற மரியாதை இல்லை”. தியாகராஜர், தீக்ஷிதர்., சியாமா சாஸ்திரி, பாபநாசம் சிவனின் பாடல்கள் போல திருக்குறளையும் இசையமைத்துப் பாடட்டுமே. திரு வி வி சடகோபன், திரு டி எம் தியாகராஜன் (டிஎம்டி) போன்றவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். இவை பிரபலமாகவில்லை. இருக்கும் இசை “எஸ்டாப்ளிஷ்மெண்ட்” இதை தன்னலம் கருதி முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக குப்பனும் சுப்பனும் பாடல்கள் புனைந்துள்ளனர். மறுபடியும் சாமி சரணம் தான் இவையும். இவை பாடப்பட்டு வருகின்றன. கர்நாடக இசை உலகளாவிய ரசனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஆனால் மதத்தின் போர்வையில். எல்லாம் ராமர் துதி, அல்லது கண்ணன் பாமாலை அல்லது முருகா போற்றி போற்றி. இந்நிலையினை மாற்ற முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இசை என்பது மனித மன உணர்வின் வெளிப்பாடாகும். இதை வெளிப்படுத்த சில வழிமுறைகள் தேவை, உள்ளன. இசைப்பது எப்படி? பாடுவது எப்படி? முதலில் ஸ்ருதி என்பது தான் வருகிறது. ஒரு காக்கையோ ஒரு குயிலோ உரக்கக் கத்தினால் தவறில்லை. கூட்டக்/கூட்டுக் கத்தலாக இருப்பின் மனதில் உபாதைகளையே உண்டாக்கும். ”சூ” என்ற சொல்லாவது நம்மிடமிருந்து வெளிப்படும். இந்தக் கூட்டுக் கத்தலை நம்மால் கேட்க இயலவில்லை என்பதே இதற்குக் காரணம். இதே திரு எம் பி ஸ்ரீனிவாசனின் சேர்ந்திசையைக் கேளுங்கள். நீங்கள் இன்பமுறுவது நிச்சயம். ஏனென்றால் பாடும் அனைவருக்கும் ஸ்ருதி பற்றிய ஞானம் இருக்கிறதோ இல்லையோ, இசையமைப்பாளருக்கு நிச்சயமாக இருக்கிறது. மனதைத் தொடுகிறது, வருடுகிறது,இசைய வைக்கிறது. மேற்சொன்ன எடுத்துக்காட்டானது எல்லா சினிமா பாடல்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு வாத்தியமும் இணையும் பொழுது எழும் இசை ரம்மியமாக இருக்க வேண்டுமென்றால் (ஆதார) ச்ருதி அக்ஷரப் பிசகில்லாமல் சரியாக அமைந்திடல் அவசியம்.
வயலின் இசைக்கலைஞர்கள் கணேஷ்-குமரேஷ் பூமி வெப்பமாதல் குறித்த தகவல்களை சீஸன்ஸ் என்ற இசை ஆல்பம் வெளிக் கொணர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். ”எங்கள் கவலை எல்லாம் அடுத்த தலைமுறையைப் பற்றித்தான். மரம் வளர்க்கிறோம், செடி வளர்க்கிறோம் என்று சொல்லி, இயற்கையை நாம் காப்பாற்றிக் கொண்டிருப்பதாக நாம் பீத்திக் கொள்கிறோம். உண்மையில் இயற்கைதான் நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது” (கல்கி, டிசம்பர் 22) என்று கூறியுள்ளனர். இவை போன்ற காலத்திற்கேற்ற முன்முயற்சிகள் மிக பாராட்டத்தக்கவை.
கவிஞர் வைரமுத்துவும் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்தைக் கண்ட நாம் என்ன செய்தோம். இதை தனது பாடல்களில் இடம் பெறச் செய்த வைரமுத்து அதனை ஸ்ரீநிதி கார்த்திக்கைக் கொண்டு பரதநாட்டியமாக அரங்கேற்றம் செய்யவும் முற்பட்டுள்ளார்.
”நிகழ்காலத்தின் மக்கள் பிரச்சினையைத் தள்ளிவைத்துவிட்டு கலைகள் முழுமைபெற முடியாது. வாழ்க்கை இரும்படித்துக் கொண்டிருக்கும்போது, கலை பூப்பறித்துக் கொண்டிருக்க முடியுமா? மக்கள், கலைகள் மீது ஆண்டாண்டு காலம் கொண்ட ஆதங்கம் இது.” எனவும் தொடர்ந்து பல்வேறு தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. டி.எம்.கிருஷ்ணாவைத் தவிரவும் இப்படி பலதரப்பில் முற்போக்கு சிந்தனைகள் நிலவுகின்றன.
இன்னுமொரு முயற்சியும் தேவை. முன்னரே எம் பி ஸ்ரீனிவாசன் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுருந்தோம். இவரைப் போலவே திரு ஏமனி சங்கர சாஸ்திரி (இவர் சிட்டிபாபுவின் குரு), திரு காமா சாஸ்திரி (பெயரைக் கொண்டு இவர்களை எடை போடாதீர்கள்), திரு எல் கிருஷ்ணன் மற்றும் திரு டி கே கோவிந்த ராவ் போன்றோர் எண்ணற்ற இசையமைப்புகளை வாத்ய் வ்ருந்தா(வாத்திய விருந்து)வாக நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இவற்றிற்கு, யார் செய்த புண்ணியமோ, சாஹித்தியமே, அதாவது சொல்வடிவமே கிடையாது. பீத்தோவன் மோட்சார்ட் போன்ற இசை மேதைகளின் இசைவடிவம் போன்றவை இவை. இவற்றை வெளிக்கொணர வேண்டும், எப்பாடு பட்டாவது. இதை அனைவரிடமும் எடுத்துச் செல்லலாம். அத்தகைய இசை பரந்துபட்ட மக்களிடம் எடுபடக்கூடும்.savukkuonline.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக