செவ்வாய், 30 ஜூன், 2015

ராஜஸ்தான் அரண்மனையை வசுந்தரா ராஜே ஆக்கிரமிப்பு !

புதுடில்லி: ஐ.பி.எல்., முன்னாள் கமிஷனர் லலித் மோடி விவகாரத்தில் சிக்கி, பா.ஜ., மேலிடத் தலைவர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே மீது, தோல்பூர் அரண்மனையை அபகரித்ததாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், பரபரப்பு புகார் கூறி, வசுந்தராவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, டில்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:* ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான, தோல்பூர் அரண்மனையை, அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆக்கிரமித்துள்ளார். லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடியுடன் இணைந்து, அந்த அரண்மனையை தன் சொத்தாக அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.

* வசுந்தராவின் முறைகேட்டை, அவரை விட்டு பிரிந்து சென்றுள்ள கணவர், ஹேமந்த் சிங், தோல்பூர் அரண்மனை அரசுக்கு தான் சொந்தம் என, கோர்ட்டிலேயே தெரிவித்துள்ளார்.
* அரண்மனை அபகரிப்பு, 2009ம் ஆண்டுக்குப் பின், அதாவது, வசுந்தரா முதல்வர் பதவியில்இருந்து இறங்கி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நடைபெற்று உள்ளது.
* கடந்த 1954 முதல், 2009 வரை, தோல்பூர் அரண்மனை, அரசின் சொத்தாகத் தான் இருந்தது
என்பதை நிரூபிக்க ஏராளமான அரசு ஆவணங்கள் உள்ளன.
* லலித் மோடியுடன் இணைந்து, அந்த அரண்மனையை தங்களின் சொத்தாக மாற்றிக் கொண்டு உள்ள வசுந்தரா, அதில், 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பிரதமர் மோடிக்கு புது பெயர்லலித் மோடியுடன், வசுந்தரா ராஜே, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடர்பு வைத்துள்ள விவகாரத்தில், தினமும், புதுப்புது தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கும் பிரதமர் மோடியை, ஜெய்ராம் ரமேஷ் நேற்று, 'சுவாமி மவுனேந்திர பாபா' என, அழைத்தார்.


லலித் மோடியுடன் தொடர்பு அம்பலம்

தோல்பூர் அரண்மனையை நிர்வகிக்க, 'நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதன் பங்குகளை, லலித் மோடி மற்றும் வசுந்தரா, வசுந்தராவின் மகன் துஷ்யந்த், மருமகள் நிகரிகா ஆகியோர் வைத்துள்ளனர்.
நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டலில் தனக்கு பங்கு இருக்கும் தகவலை, 2013 சட்டசபை தேர்தலில், வசுந்தரா தெரிவித்துள்ளார். வசுந்தராவுக்கு, 3,280 பங்குகளும், மகன் மற்றும் மருமகளுக்கு, 3,225 பங்குகளும், லலித் மோடிக்கு, 815 பங்குகளும் உள்ளன.இதன் மூலம், இந்திய சட்டங்களை
மதிக்காமல், லண்டன் தப்பிச் சென்ற லலித் மோடியுடன், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவுக்கு நெருங்கிய வர்த்தக தொடர்பு இருப்பது மேலும் அம்பலமாகியுள்ளது. மொரீஷியஸ் நாடு வழியாக, முறைகேடாக, ராஜஸ்தானுக்கு பணத்தை திருப்பியுள்ளார், லலித் மோடி.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறினார்.

பொய் சொல்கிறார் ஹேமந்த்: பா.ஜ.,
ராஜஸ்தான் மாநில, பா.ஜ., தலைவர் அசோக் பர்னாமி, மாநில அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் நேற்று கூறியதாவது: தோல்பூர் அரண்மனை, வசுந்தராவின் முன்னாள் கணவர் ஹேமந்த் சிங்குக்கு சொந்தமானது. அவர், அந்த அரண்மனையை, வசுந்தரா - ஹேமந்த் தம்பதியின் வாரிசான, துஷ்யந்திற்கு தானமாக வழங்கியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
ஆனால், இப்போது, வசுந்தராவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, ஹேமந்த் தவறான தகவலை கூறுகிறார். அந்த அரண்மனை, துஷ்யந்துக்கு சொந்தமானது
என்பது உறுதி. இதை, கோர்ட்டில் நிரூபிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறின dinamalar.com

கருத்துகள் இல்லை: