திங்கள், 29 ஜூன், 2015

கேரளா:ஜீன்ஸ், மிடி அணிய தடை மாணவியருக்கு தடை! காவி தாலிபான்கள் அடாவடி!

திருவனந்தபுரம்:கேரளாவில் உள்ள தனியார் பெண்கள் கல்லுாரியில், மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை ஆகியவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவியருக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடக்காவு என்ற இடத்தில், முஸ்லிம் கல்வி சமூகத்தின் சார்பில், பெண்கள் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் பேன்ட், குட்டை பாவாடை, டிஷர்ட், இறுக்கமான உடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கல்வி ஆண்டு முதல், முதலாமாண்டு படிக்கும் மாணவிகளுக்கு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, சல்வார், சுடிதார் பேன்ட் மற்றும் மேல் அங்கி ஆகியவற்றை மாணவிகள் அணிந்து வர வேண்டும்.
இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் சீதாலட்சுமி கூறியதாவது: சமீப காலமாக, மாணவியர் அணிந்து வந்த உடை, தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தவிர்ப்பதற்காகவே, உடைகள் அணிவதில் கட்டுப்பாடு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சீனியர் மாணவியருக்கு, சீருடை அணிவதில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுப்பாடுகள் அவர்களுக்கும் பொருந்தும். சுடிதார், சல்வார் அணியும்போது, துப்பட்டாவுக்கு பதிலாக, மேல் அங்கி அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: