புதுடில்லி:''நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மையான நிலவரமே, ராகுலுக்கு தெரிவது இல்லை; கட்சியின் மூத்த தலைவர்களை அவர் மதிப்பதும் இல்லை,'' என, காங்., மூத்த தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான பரத்வாஜ் ஆவேசத்துடன் தெரிவித்து உள்ளார்.
காங்., மூத்த தலைவர்களில் ஒருவர் பரத்வாஜ். மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர். கர்நாடக மாநில கவர்னராகவும் பதவி வகித்தார்.
ஏற்கனவே அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், காங்., தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், காங்., துணைத் தலைவர் ராகுலையும் விமர்சித்துள்ளார். வாத்தியார்களை மதிக்காத மாணவன் வளரமாட்டான். மூத்தவர்களை மதிக்காத
முந்திரிகொட்டை மந்திரிகோட்டையை பிடிக்கமாட்டான்.சின்னபசங்க வெள்ளாமை
வீடுவந்து சேராது என்பதற்கு ராகுல் நல்ல உதாரணம்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: ராகுல், இளைஞர்; கட்சியில் உள்ள இளைஞர்களை வழி நடத்துவதற்கான தகுதி அவருக்கு உள்ளது. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களை அவர் மதிப்பது இல்லை; நாட்டில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலவரமே அவருக்கு தெரிவதில்லை. ராகுலின் தந்தை ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் நான் இடம் பெற்றேன். ராஜிவை பிரதமர் பதவியேற்க வற்புறுத்தியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ராகுல், மத்திய அமைச்சர் பதவி என்ற பொறுப்பை ஏற்க மறுத்தவர்; தனக்குள்ள பொறுப்பை தட்டிக் கழித்தவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக