புதுடில்லி : சன் டி.வி. நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்று வழங்க முடியாது
என என மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இத்தகவலை பாதுகாப்பு
துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.இது தொடர்பாக
இத்துறை உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சன் குழுமம் 33 டி
வி. சேனல்கள் மற்றும் எப். எம்., ரேடியோ நடத்தி வருகிறது. பல்வேறு
விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாலும், சன் குழும நிறுவன உரிமையாளர்கள் மீது
குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் , இந்நிறுவனத்திற்கு பாதுகாப்பு
தொடர்பான சான்றளிக்க முடியாது. நாடு முழுவதும் சேனல்கள் உள்ளிட்ட
பெரும் நிறுவனங்கள் நடத்துவதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதற்கு மத்திய
உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பி்க்க வேண்டும். இவ்வாறு ஏற்கனவே
பாதுகாப்பு சான்றுகள் பெற்று இது காலவதியாகும் போது, மீண்டும் ,
புதுப்பிக்க வேண்டும்.
இது போன்று பல நிறுவனங்களில் சன் டி.வி.,யும் தற்போது உள்துறை அமைச்கத்திடம் விண்ணப்பித்துள்ளது.
பொதுவாக எந்த நிறுவனமும் இதுபோன்று விண்ணப்பி்கும் போது நிறுவனம் நடத்தும் உரிமையாளர்கள், தங்களைப் பற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு பார்க்கும் போது சன் குழுமம் நடத்தும் தயாநிதி, கலாநிதி ஆகியோர் மீது பல்வேறு முறைகேடு வழக்குகள் உள்ளன. இதனை இவர்களும் ஒத்துக்கொண்டு சில காரணங்களை தெரிவித்துள்ளனர் . குறிப்பாக நிதி மோசடி. ஹவாலா உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் எந்த நிறுனவனத்திற்கும் பாதுகாப்பு சான்று அளிக்க முடியாது. இந்த அடிப்படையில் சன் குழுமத்திற்கு பாதுகாப்பு சான்று அளிக்க இயலாது . இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான கொள்கை முடிவில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக