இதன்மூலம், மழைநீர் சேகரிப் பிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே ஆ.கருங்குளம் கிராமத்தைச்
சேர்ந்தவர் முருகேசன் (60). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில்
நகைக்கடை வைத்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும், வருவாயில் விவசா யத்தில்
ஈடுபட முடிவு செய்து முழு மூச்சுடன் இறங்கினார்.
சிவகங்கையில் தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், சொந்த நிலங்களை தரிசாக
போட்டுவிட்டு கண்ணீரோடு வெளி மாவட்டங்களுக்கு கூலி வேலைக்குச் செல்லும்
விவசாயிகள் கடைசிவரை வறுமையில் அல்ல ல்பட்டு வருகின்றனர்.
இந்த பிற்போக்கான சிந்தனையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், சிவகங்கை
வறட்சி மாவட்டம் அல்ல; வளர்ச் சிக்கு உகந்த மாவட்டம்தான் என்பதை
நிரூபிக்கும் வகையிலும், விவசாயத்தில் பசுமைப் புரட்சி செய்துள்ளார்.
இதுபற்றி முருகேசன் கூறியதாவது: பிற தொழில்கள் மூலம் வருமானம்
கிடைத்தாலும், விவசாயத்தில் ஈடுபடுவதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, வேறு
எதிலும் கிடைக்காது. சிவகங்கை மாவட்டத்தில் மண் வளம், நீர்வளம் இருந்தும்
மழைநீரைத் தேக்கி விவசாயம் செய்ய முடியாமல், பொன் விளையும் பூமியை தரிசாகப்
போட்டுவிட்டு, விவசாயிகள் வெளியூர்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர்.
இந்த சிந்தனையை மாற்றி, விவசாயம் லாபகரமான தொழில் தான் என்பதை நிரூபிக்க,
நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், விவசாயத்தில் ஈடுபட்டு
வருகிறேன்.
இதற்காக 15 ஆண்டுகளுக்கு முன், கருங்குளத்தில் உள்ள எனது நிலத்தில் 10
ஏக்கருக்கு மேல் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் குளம் வெட்டினேன்.
அக்குளத்தில் சுமார் 20 அடி ஆழத்துக்கு மழைத் தண்ணீரைத் தேக்கி 300
ஏக்கரில் மா, தென்னை விவசாயம் செய்து வருகிறேன்.
குளத்தில் 25 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டுள்ளதால், ஒருபக்கம் மீன்
வளர்ப்பும் நடக்கிறது. 100 செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதால்
பயிர்களுக்குத் தேவையான இயற்கை உரம் தாராளமாகக் கிடைத்து விடுகிறது.
விவசாயம் மூலம் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும்
அளிக்க முடிகிறது.
கடின உழைப்புடன், அறிவியல் பூர்வமாக தொழில்நுட்பத்தையும் இணைத்து
பயன்படுத்தினால் வறட்சியான நிலத்திலும் விவசா யத்தில் சாதிக்கலாம். விளை
பொருள்களை பாடுபட்டு உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. அவற்றை
சந்தைப்படுத்துவதிலும் விவசாயிகள் கவனம் செலுத் தவேண்டும். விவசாயி
வியாபாரியாகவும் மாறினால்தான் 90 சதவீதம் லாபம் கிடைக்கும் என்கிறார்
முருகேசன்.tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக