திங்கள், 29 ஜூன், 2015

R.K. நகரில் 50 வாக்குசாவடிகளில் முறைகேடு! ஒரே ஒரு வாக்கு சாவடியில் மட்டும் மறுதேர்தல்! சக்சேனா விசுவாசம்!

ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், கண்துடைப்பாக ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார். கடந்த 27ஆம் தேதி ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலின்போது 181வது வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்களை வாக்களிக்க அனுமதித்ததாக தேர்தல் பார்வையாளரும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 181வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (திங்கள்கிழமை) மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன், ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடைபெற்றது. கண்துடைப்பாக ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழக தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், கைரேகையை பதிவு செய்து வாக்களிப்பதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதற்கு மிக வெளிப்படையான ஒரு உதாரணம் இது. இதற்காக தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இதை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதற்கான வருத்தத்தை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் இந்த குறைபாடுகளை எதிர்காலத்தில் களைவதற்குரிய முயற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். கிட்டதட்ட 50 வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தெரிவித்தோம். ஆனால் கண்துடைப்புக்காக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மறுவாக்குப்பதிவு செய்திருக்கிறார்கள் என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: