ஞாயிறு, 3 மே, 2015

நேபாள இடதுசாரிகள் எச்சரிக்கை: இந்தியாவால் நேபாள பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்!

நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர்.
நேபாள காங்கிரஸ் தலைவர் சுஷீல் கொய்ராலா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைவர் மோகன் வைத்யா, நேபாள விவசாயக் கட்சித் தலைவர் நாராயண் மான் பிஜுக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேற்கண்ட 3 தலைவர்களும் பேசியதாவது:
நிலநடுக்கத்துக்குப் பிறகு இந்தியாவின் தலையீடு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளத்தின் கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது.
சீனாவுடனான நேபாளத்தின் வடக்குப் பகுதி எல்லை மீதும், காத்மாண்டுவில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் மீதும் இந்தியாவின் கவனம் உள்ளது. இது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தக் கூடும். எனவே பிரதமர் கொய்ராலா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இந்திய ராணுவம் மற்றும் மீட்புக் குழுக்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அத்தலைவர்கள் கூறினர். dinamani.com

கருத்துகள் இல்லை: