திங்கள், 4 மே, 2015

பஞ்சாப் :கனடாவில் இருந்து தாய் கூலி படையை ஏவி மகளை கொன்ற வழக்கில் தீர்ப்பு

டெல்லி: கனடாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்ததற்காக அவரது தாய் ஆள் வைத்து கொலை செய்த வழக்கில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் வெளிநாடு வாழ் இந்தியரான ஜஸ்விந்தர் கௌர். அவர் கடந்த 1999ம் ஆண்டு இந்தியா வந்தபோது சுக்விந்தர் என்ற ஆட்டோ டிரைவரை காதலித்தார். பின்னர் அவர் தனது பெற்றோர், தாய் மாமாவின் விருப்பத்திற்கு எதிராக சுக்விந்தரை 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஜஸ்விந்தர் கனடா சென்றார். அவர் கனடாவில் இருந்தபோது அவரது தாய் ஜஸ்விந்தர் போன்று கையெழுத்துபோட்டு சுக்விந்தர் மீது போலி புகார் எழுதி அதை ஃபேக்ஸ் மூலம் பஞ்சாப் போலீசாருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அறிந்த ஜஸ்விந்தர் இந்தியாவுக்கு வந்து போலீசாரை சந்தித்து அது போலி புகார் என தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் இந்தியாவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தனது மகள் ஒரு ஆட்டோ டிரைவருடன் வாழ்வதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஸ்விந்தரின் தாய் பஞ்சாபைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங்குடன் சேர்ந்து மகளை கொல்ல திட்டமிட்டார். அவர் கூலிப்படையை வைத்து 2000ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஜஸ்விந்தரை கொலை செய்தார். ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது ஜஸ்விந்தர் கொல்லப்பட்டார், சுக்விந்தர் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் போலீஸ் அதிகாரி ஜோகிந்தர் சிங், கூலிப்படை ஆட்கள் அஷ்வனி குமார், அனில் குமார் மற்றும் ஒருவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜஸ்விந்தரின் தாய் மற்றும் அவரது தாய் மாமாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: