வியாழன், 7 மே, 2015

சல்மான்கானுக்கு 1 மணிக்கு சிறை 5 மணிக்கு ஜாமீன் வேகமோ வேகம்

கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சல்மான் கான், மாலையே தனது வீட்டுக்குத் திரும்பினார். கடந்த 2002, செப்டம்பர் 28ம் தேதியன்று அதிகாலையில், சல்மான் கான் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு தனது காரில் பாந்த்ராவில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு வரை நடந்த விருந்தில் கலந்து கொண்ட அவர், மது போதையில் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பாந்த்ரா பாலிஹில் ரோடு பகுதியில் சல்மான் கான் கார் வந்தபோது, சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் பலியானார். காலீம் முகமது, முன்னா மலாய் கான், அப்துல்லா ரவுப் ஷேக், முஸ்லிம் ஷேக் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் கானுக்கு அன்றைய தினமே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Read more //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: