ஞாயிறு, 3 மே, 2015

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜோன் கேரி மைத்திரி அரசுக்கு புகழாரம்!

அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு வந்தார். அங்கு இலங்கையின் வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் ஜான்கெர்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமெரிக்க மந்திரி ஜான்கெர்ரி நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் புதிய அரசு தமிழர்களுக்கான ஜனநாயகத்தை ஊக்கப்படுத்தவும், மனித உரிமைகளுக்காகவும், மறுகட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அரசு செயலாற்றுவதற்காக தனது கதவுகளையும், மனதையும் திறந்து வைத்துள்ளது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமைதியை ஏற்படுத்தவும், அனைத்து மக்களும் வளம்பெறவும் அரசு பாடுபட்டு வருகிறது.
இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் கடுமையான பிரச்சினைகளை சமாளிக்க அஞ்சுவதில்லை. அதேபோல தங்கள் வாக்குறுதியை காப்பாற்றவும் அக்கறை செலுத்துகிறார்கள்.


மனித உரிமை பிரச்சினைகள், மறுகட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல முடிவுகளை காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இலங்கை அரசிடம் உள்ளது. இலங்கை அரசுடன் நெருக்கமாக பணியாற்ற அமெரிக்க அரசு விரும்புகிறது. எனவே இதுதொடர்பாக இலங்கை, அமெரிக்க அரசுகள் வருடாந்திர பேச்சுவார்த்தை நடத்தவும் எங்கள் சந்திப்பின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: