வியாழன், 7 மே, 2015

சோனியா: தனி நபரின் ஆட்சி அதுவும் ஒரு சிலருக்காக நடக்கிறது!

மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும் மோடி அரசு மக்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய சோனியா காந்தி, "மோடி அரசு சிலருக்காக ஒருவரால் நடத்தப்படுகிறது. ஆட்சியைப் பிடித்து ஓராண்டு ஆகிவிட்டது ஆனால் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆளும் கட்சி, நாடாளுமன்றத்தில் அகந்தையுடன் நடந்து கொள்கிறது.
இந்த ஓராண்டில் அவர்கள் தாங்கள் செய்தததாக சொல்லி மார்தட்டிக் கொள்ளும்? விவசாயிகளுக்கு விரோதமான நில மசோதாவை நிறைவேற்றியதற்காக பெருமைப் பட்டுக் கொள்ள முடியுமா?

அரசாங்க நடைமுறைகளையும் சிக்கலாக்கியுள்ளது பாஜக. அரசு உயர் அதிகாரிகள் தங்களுக்கான அதிகாரம் இருந்தும் இல்லாதது போலவே உணர்கின்றனர். எல்லா முடிவுகளையும் மோடியே எடுக்கிறார். அரசு இலாகாவின் முக்கிய உயர் பதவிகள் பல காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இது அனைத்து அதிகாரத்தையும் பிரதமர் ஒருவரிடமே ஒப்படைக்கும் முயற்சி.
இந்திய அரசாங்கத்தின் தனித்துவ அடையாளமாக இருந்த எல்லாவற்றையும் சிதைக்கவே இந்த அரசு முயல்கிறது. இத்தருணத்தில் நாம் (காங்கிரஸ் கட்சியினர்) அதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார். /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: