பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை
முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து
உயிரை மாய்த்துக் கொண்டனர்.
பதுளை கொஸ்லந்தை தியலும நீர்
வீழ்ச்சிக்கருகில் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துகொள்ள தயாராயிருப்பதாக
கொஸ்லந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பதில் பொறுப்பதிகாரி நிஹால்
சுகததாச பெண் கான்ஸ்டபிளுடன் ஸ்தலத்துக்கு சென்றார். அங்கு பல காதல்
ஜோடிகள் இருந்ததால் விசாரணைகளில் சந்தேகம் ஏற்படவில்லை.
அன்று காலை இந்நீர் வீழ்ச்சிக்கு
கீழ்ப்பகுதியில் காணப்படும் ஹோட்டலொன்றில் இளம் ஜோடியொன்று உணவுப்
பொட்டலமொன்றை வாங்கியதாக தகவல் கிடைத்ததையடுத்து ஹோட்டல் முகாமையாளரை
விசாரணை செய்ததில் இளம் ஜோடியின் அங்க அடையாளங்களை தெரிந்து கொள்ள
முடிந்தது.
உல்லாசப் பயணிகள் குழுமியிருந்த
அவ்விடத்தில் இவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை நீர்
வீழ்ச்சியின் மேல் பகுதிக்கு இவர்கள் சென்றிருக்கலாமென அனுமானம் செய்த
பொலிஸார் அவ்விடத்துக்கு ஏறிச்சென்றனர்.
பொலிஸாரும், பெற்றோரும் சேர்ந்து தேடிய
ஜோடியின் பெயர் யோகராஜா, சகுந்தலா என்பதாகும். பதினேழு வயதுடைய சகுந்தலா
உதயாங்கனி, பதினெட்டு வயதுடைய சரவணபவன் யோகராஜா ஆகியோர் ஊரிலுள்ள
பாடசாலையில் ஒன்றாக கற்றனர்.
நான்கு பேர்கொண்ட குடும்பத்தில் யோகராஜா
கடைசிப் பிள்ளை இவருக்கு ஒரு வயதாக இருக்கும் போது எதிரிகள் இவரது தாய்
தந்தையை வெட்டிக் கொன்றனர். அமராவதி செல்லச்சாமி என்ற சின்னம்மா இவரை
வளர்த்து வந்தார்.
காதலர்களான இவர்களுக்கு குடும்பத்தில்
எதிர்ப்பு கிளம்பியது. சகுந்தலாவை மறந்து விடும்படி அவரது பெற்றோர்
யோகராஜாவிடம் கண்டித்து கூறினர்.
விவசாயியான, சகுந்தலாவின் தந்தை மகளின் எதிர்காலத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார்.
பத்தாம் ஆண்டில் பயிலும் சகுந்தலா அவரது
சகோதரியின் நோய்க்காக வைத்திருந்த மருந்து வில்லைகளை ஒருமுறை உட்கொண்டு
பின்னர் கொஸ்லந்தை ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்தன் காரணமாக உயிர்
தப்பியிருந்தார்.
மனம் தளர்ந்த யோகராஜா கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இனிப்புப் பண்டம் தயாரிக்கும் நிறுவனமொன்றில் வேலையில் அமர்ந்தான்.
சில நாட்களின் பின் சின்னம்மாவுக்கும்
காதலிக்கும் புதிய உடைகள் வாங்கிவந்தார். புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் பேச முடியவில்லை. சகுந்தலாவின் தாய்
அவளுடனிருந்தார்.
அன்று காலை யோகராஜாவுக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பினையடுத்து அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
இதனை சின்னம்மா அவதானித்தார். சகுந்தலா
பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறினார்.
இருவருமாக சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.
தியலும நீர்வீழ்ச்சி இவர்களது இறுதி
இடமாயமைந்தது. இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். இவ்வுலகம் எங்கள் காதலை
அங்கீகரிக்கவில்லை. ஒருபோதும் நாமிருவரும் ஒன்று சேர இடம் கிடைக்காது.
அதனால் இன்று இவ்வுலகை விட்டுப்
பிரிகிறோம் அடுத்த ஜென்மத்திலாவது ஒன்று சேர்வோம் என்றனர். யோகராஜாவின்
கையடக்க தொலைபேசியை எடுத்த சகுந்தலா தன்னுடன் வகுப்பில் பயிலும்
நிஷாந்திகுமாரியுடன் தொடர்புகொண்டு “நாமிருவரும் தியலுமயில் குதிக்கிறோம்.
நீங்கள் நன்றாக இருங்கள்” என்று கூறியதுடன் தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
நிஷாந்தி உடனடியாக இச் செய்தியை சகுந்தாவின் தாயிடம் கூறியதையடுத்து பொலிஸ் அவசர பிரிவுக்கும் இச்செய்தியெட்டியது.
தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியின்
மேல்பகுதிக்கு பொலிஸார் சென்றபோது சகுந்தலாவின் தந்தையை அங்கு கண்டனர்.
மகளைத் தேடி வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறினார்.
நீர் வீழ்ச்சியின் அபாயகரமான பகுதியில்
காதலர்கள் இருப்பதை கண்ட கான்ஸ்டபிள் சமிந்த மெதுவாக அவர்கள் அருகில்
நெருங்கியபோது திடீரென யோகராஜா சகுந்தலாவை கட்டிப் பிடித்தவாறு
கால்சறுகியபோது கான்ஸ்டபிள் சமிந்த, சகுந்தலாவின் கேசத்தை
பிடித்துக்கொண்டார். இருப்பினும் அவரை காப்பாற்றமுடியவில்லை.
நீர் வீழ்ச்சியின் கீழ் பகுதியிலுள்ளோர்
அனைவரும் சப்தமிட்டனர். ஐநூற்றெழுபது அடி உயரமான தியலும நீர் வீழ்ச்சியின்
மேல் பகுதியிலுருந்த யோகராஜா சகுந்தலாவை கட்டிப்பிடித்தவாறு கீழ்ப்
பகுதிக்கு விழுவதை அனைவரும் கண்டனர்.
முதலில் சகுந்தலாவின் சடலம்
கீழ்பகுதியிலுந்து கண்டெடுக்கப்பட்டது. மறுநாள் யோகராஜாவின் சடலம்
கற்பாறையில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
யோகராஜாவின் சவப்பெட்டி மூடப்பட்டு சீல்
வைக்கப்பட்டிருந்தது. சகுந்தலாவின் பூதவுடல் அவரது வீட்டில்
வைக்கப்பட்டிருந்தது. இருவரது பூதவுடல்களும் அருகருகே நல்லடக்கம்
செய்யப்பட்டன.thinakaran.lk/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக