ஞாயிறு, 23 நவம்பர், 2014

சாமியாருக்கு பாலாபிஷேகம் செய்த பாலில் பாயசம் செய்து பக்தர்களுக்கு (ராம்பால்) பிரசாதமாக வழங்கினார்

ஹிசார்: அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது, 'கம்பி எண்ணி' வரும் சாமியார் ராம்பாலுக்கு, அவரின் ஆசிரமத்தில் பால் குளியல் நடந்ததாகவும், அந்த பாலில் பக்தர்களுக்கு பாயாசம் தயாரித்து வழங்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த மனோஜ் என்பவர் கூறியதாவது: சாமியார் ராம்பாலுக்கு, ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும், பக்தர்கள் சார்பில் பால் குளியல் நடத்தப்படும். குடம் குடமாக அவர் மீது பால் ஊற்றப்படும். பின், அந்த பால் முழுவதையும், பாத்திரத்தில் பிடித்து, பால் பாயாசம் தயாரிக்கப்படும்.இன்னும் இந்தமாதிரி பாலெல்லாம் குடிக்க ரெடியா இருக்கோம்ல? இன்னும் நெறைய சாமியாருங்க இருக்காக கொஞ்சம் பொறுங்க  தினுசு தினுசா வருவாய்ங்க  இந்த பீல்டுதாய்ன் நஷ்டமே இல்லாத பீல்டு   
இந்த பால் பாயாசம், ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு, பிரசாதமாக தரப்படும். சாமியாரின் அருள் வாக்கு வேண்டி வரும் பக்தர்கள், இந்த பிரசாத பாயாசத்தை பய பக்தியுடன் வாங்கிச் செல்வர். இவ்வாறு, அவர் கூறினார்.சாமியாரின் ஆசிரமத்துக்குள் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில், துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள், பெட்ரோல் குண்டுகள், மிளகாய் மற்றும் மிளகு பொடி, ஹெல்மெட், உருட்டு கட்டைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாமியாரின் ஒரு அறையில் ஆடம்பர படுக்கைகளும், கர்ப்ப சோதனை கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: