நாமக்கல்: காங்கிரஸில் இருந்து வெளியேறிவருக்கு மைக் பிடித்து பேசவோ,
சிந்திக்கவோ தெரியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில்
நடைபெற்றது. மாவட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமையில் நடந்த கூட்டத்தில்
கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸில் இருந்து வெளியேறிவருக்கு மைக் பிடித்து பேசவோ, சிந்திக்கவோ
தெரியாது. அவருடன் வெறும் 5 சதவீதம் பேர் தான் கட்சியில் இருந்து
வெளியேறியுள்ளனர்.
அந்த 5 சதவீதம் பேரும் வரும் 28ம் தேதிக்கு பிறகு காங்கிரஸுக்கே
வந்துவிடுவார்கள். ஆனால் பிரிந்து சென்ற தலைவர்கள் யாரையும் மீண்டும்
சேர்த்துக் கொள்ள மாட்டோம். வாசனுக்கு பின்கதவால் பேரம் பேசி துட்டு சேர்க்க மட்டுமே தெரியும் இப்படிப்பட்ட ஆசாமிகளை ராஜ்யசபா மத்திய மந்திரின்னு உயத்தி வச்ச காங்கிரசை என்ன சொல்ல உங்க ஜோட்டாலேயே உங்க தலைல அடிக்கணும்லே?
அரசியலில் ஜொலிக்க பேச்சாற்றலும், அரசியல் சிந்தனையும் வேண்டும். அவை இருந்தும் ஜொலிக்க முடியாமல் போனவர்கள் பலர். இந்நிலையில் உங்களால் எப்படி ஜொலிக்க முடியும்? வாசன் பிரிந்து சென்றதை சிலர் சனிப்பெயர்ச்சி என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது பிரிவால் காங்கிரஸுக்கு அமாவாசை நீங்கி பவுர்ணமி வந்துள்ளது என்பேன். தமிழகத்தில் காங்கிரஸுக்கு 4 சதவீத வாக்குகள் தான் உள்ளன என்பதில் உண்மை இல்லை. நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள 100 பேரை அழைத்து நீங்கள் எந்த கட்சியில் இருக்கிறீர்கள் என்று கேட்டால் 10 சதவீதம் பேர் தான் ஏதாவது ஒரு கட்சியின் பெயரை கூறுவார்கள். மீதமுள்ள 90 சதவீதம் பேர் தேர்தல் நேர சூழலை மனதில் வைத்தே வாக்களிப்பார்கள். அதனால் அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி நிலையானது அல்ல. கடந்த தேர்தலில் நம் சாதனைளை மக்களிடம் தெரிவிக்காததால் தோல்வி அடைந்தோம். மத்தியில் மோடி சர்வாதிகார ஆட்சி நடத்துவது மக்களுக்கு புரிந்து வருகிறது. தேர்தலுக்கு 15 மாதங்கள் உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நிறைய வேலை வைத்திருக்கிறேன். அதாவது அவர்கள் மக்கள் பிரச்சனைக்காக போராட வேண்டும். தேவைப்பட்டால் சிறை செல்லவும் தயங்கக் கூடாது என்றார்.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக