பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: கனிமொழி பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு மகப்பேறு
காலத்தில் தமிழக அரசு வழங்கும் நிதிஉதவி பெண்களுக்கு முறையாக சென்று
சேருவதில்லை என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்
சாட்டியுள்ளார்.மாநிலங்களவையில்
புதன்கிழமை அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையேற்றம் குறித்து
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிடடனர்.இதனைத்தொடர்ந்து
பேசிய கனிமொழி, தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி முதல்
22ஆம் தேதி வரை 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. முதல் அமைச்சர்
பன்னீர்செல்வம், ஊட்டச்சத்து குறைபாட்டினாலேயே குழந்தைகள் உயிரிழந்ததாக
கூறியுள்ளார். அப்படியென்றால் அரசு மகப்பேறு காலத்தில் வழங்கும் நிதிஉதவி
பெண்களுக்கு முறையாக சென்று சேரவில்லையா என்று கேள்வி எழுப்பினார்.மிகவும்
பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகளால்
வழங்கப்படும் மகப்பேறு கால நிதியுதவி சென்று சேர்வதில்லை. தமிழக முதல்
அமைச்சர் ஏன் நிதியுதவி சென்று சேரவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க
வேண்டும். இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றார்.இதற்கு அதிமுக உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக