சேலம் : சேலம் அருகே நடந்த வங்கி செயலாளர் கொலையில் அவரது மனைவியை போலீசார்
அதிரடியாக கைது செய்தனர். வேறு ஒருவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தால்
அடித்து காலை உடைக்க சொன்னதாகவும், ஆனால் கொலையே செய்து விட்டனர் என்று
போலீசிடம் அவர் தெரிவித்துள்ளார்சேலம் உத்தமசோழபுரம் அடுத்த சூளைமேடு
பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(45). கல்பாரப்பட்டி கூட்டுறவு வங்கியின்
செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரவு வீட்டிற்கு
இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம ஆசாமிகளால் கொடூரமாக வெட்டிக்கொலை
செய்யப்பட்டார். இந்த கொலை கலாசாரம் பரவியதற்கு சினிமா வன்முறை காட்சிகள்தான் முக்கிய காரணம்.
தனிப்படை போலீசார் தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மல்லு£ர் அருகே தொட்டிவலசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மல்லசமுத்திரம் ரவிச்சந்திரன் கடந்த வாரம் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இக்கொலைக்கு அண்ணாமலையின் மனைவி சாந்தி தான் காரணம். அவர் தான் கொலை செய்யுமாறு கூறியதாகவும் கூறினார்.இதையடுத்து சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி னர். அப்போது போலீசாரிடம் அவர் கூறியிருப்பதாவது:
‘எனது கணவர் வங்கி செயலாளராக இருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலிலும் செய்து வந்தார். சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் பெண்களுக்கே செலவு செய்து வந்தார். குறிப் பாக அவரது நண்பர் ஒருவரின் மனைவிக்கு செலவு செய்து இருவரும் சுகபோகமாக வாழ்ந்தனர்.இதை கேட்ட என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இந்நிலையில் எனது கணவரிடம் டிரைவராக இருந்த மல்லசமுத்திரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனிடம் கூறி அழுதேன். கணவரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து கணவரின் காலை அடித்து உடைக்கு மாறு மல்லசமுத்திரம் ரவிச்சந்திரனிடம் கூறினேன். ஆனால் கொலையே செய்து விட்டனர். இவ்வாறு சாந்தி கூறியதாக போலீசார் தெரிவித்தனர் dinakaran.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக