புதன், 26 நவம்பர், 2014

கம்யுனிஸ்ட் EMS நம்பூதிரிபாட்டை விட வடலூர் ராமலிங்க அடிகளார் முற்போக்கு வாதியே

Ramalinga AdigalarE._M._S._Namboodiripadஇராமலிங்க அடிகள் VS நம்பூதிரிபாட்

மார்க்சியத்தை விஞ்ஞானப் பூர்வமாகப் புரிந்து கொண்ட பிறகும், அறிவியலுக்கு எதிராகப் பிறப்பாலேயே உயர்வு தாழ்வு எனறு புனிதப்படுத்திய ‘நாலு வர்ண’ நான்கு வேதங்களில் கம்யுனிசத்தைத் தேடிய, தன் பெயரை மறைத்து தன் ஜாதி பெயரையே தன் பெயராக அடையாளப்படுத்திக் கொண்ட, ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் (1909 –1998) என்ற கம்யுனிஸ்டை விட;
விஞ்ஞானத்திற்குப் புறம்பாக ஆன்மீகத்திற்குள்ளே தன்னை முற்றிலுமாக மூழ்கடித்துக் கொண்டு கற்பனாவாதங்களுக்குள் விடுதலையைத் தேடிய போதிலும், நான்கு வேதங்களின் மீது,
‘நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே – மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார்..’ என்று காறி துப்பி, தன் பெயருக்குப் பின் இருந்த ஜாதிப் பெயரை துறந்த ‘சாமியார்’ இராமலிங்க அடிகளே (1823 – 1873) எனக்கு முற்போக்காளராகத் தெரிகிறார்.

கருத்துகள் இல்லை: