சனி, 29 நவம்பர், 2014

எதற்காகவும் சுயமரியாதையை இழக்கமாட்டேன்: கேரளாவில் குஷ்பு!

திருவனந்தபுரம்: நான் எதற்காகவும் என்னுடைய சுயமரியாதையை இழக்கமாட்டேன் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பு திமுகவில் இருந்த போது அட்ராக்ஷன் ஆப் த பிகர் ஆக இருந்தார். இதனாலேயே அந்த கட்சியில் இருந்த குடும்ப பெண்மணிகளுக்கு சற்றே பொறாமை என்று கூறலாம். ஏற்கனவே திமுகவில் இருந்த மகளிர் அணியினர் கூட குஷ்புவை பொறாமை கண்ணோட்டத்துடனேயே கூட காண்பது வழக்கமானது. ஒரு நடிகை என்பதையும் தாண்டி குஷ்புவின் பிரசாரம் ரசிகர்களை கவரவே அவர் போகும் இடங்களில் கூட்டம் கூடியது. திமுகவில் மதிப்பில்லை என்று அவர் விலகிய பின்னர் எந்த கட்சியிலும் சிலகாலம் சேராமல் இருந்தார். பாஜக பக்கம் போவது போல போய், திடீரென்று தனது திரையுலக நண்பர்கள் மூலம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார் குஷ்பு. இதோ அவரின் அடுத்த அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த குஷ்புவினால் கன்னடம், மலையாளத்தை புரிந்து கொள்ள முடியுமாம் எனவே அவர் காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் குஷ்பு நேற்று கேரளாவிற்கு பயணமாகியிருந்தார். திருவனந்தபுரத்தில் தேசிய பெண் போலீஸ் அதிகாரிகளின் மாநாடு நடந்து வருகிறது. கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதுதான் ஹைலைட். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகள் சிறு வயது முதலே பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். எதற்காகவும் என் சுயமரியாதையை இழக்கமாட்டேன்: கேரளாவில் கலக்கிய குஷ்பு நானும் பயப்படுகிறேன் பெண் குழந்தைகளை வெளியே அனுப்பவே பெற்றோர் பயப்படுகிறார்கள். எனது மகள்களும் வெளியே செல்லும்போது, எல்லா தாய்மார்களை போல எனக்கும் பயம் ஏற்படுகிறது. அம்மாக்கள் பயிற்சி தரணும் அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க பெண்களால் மட்டுமே முடியும். இதற்கான பயிற்சியை தாய்மார்கள் அவர்களுக்கு அளிக்க வேண்டும். மும்பை டூ சென்னை எனது தந்தை என் தாயாரை பிரிந்து இன்னொரு பெண்ணை நாடிச் சென்ற போது எங்கள் குடும்பம் தவித்துப் போனது. எனவே தான் நாங்கள் மும்பையில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தோம். தாய் கொடுத்த ஊக்கம் வாழ்க்கையை நடத்த நான் சினிமா தொழிலை தேர்ந்தெடுந்தேன். அதில் சிறப்பாக பணியாற்றியதால் நல்ல நிலைக்கு உயர்ந்தேன். இதற்கு பின்னணியில் இருந்து என்னை உருவாக்கியது எனது தாயார். அப்பாவை தேடவில்லை அம்மா கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் என்னை உயர வைத்தது. குடும்பத்தை விட்டு தந்தை பிரிந்து சென்ற பின்பு எதற்காகவும் நான் அவரை தேடியதே இல்லை. சுயமரியதை அவசியம் இதனால் எப்போதும் நான், எனது சுய மரியாதையை விட்டு கொடுத்தது இல்லை. எதற்காகவும் அதை இழக்க மாட்டேன். மகள்களுக்கு யூனிபார்ம் எதிர்காலத்தில் என் மகள்கள் சட்டத்தை அமல்படுத்தும் பணியிலோ அல்லது சீருடை பணியிலோ சேர வேண்டும் என்பதே என் விருப்பம். உண்மையான கதாநாயகிகள் சமூக பணியில் சீருடை பணியாளர்களின் உழைப்பு போற்றத்தகுந்தது. அவர்கள் தான் இப்பணியில் ஈடுபடும் எங்களை போன்றவர்களை விட உண்மையான கதாநாயகிகள். அவர்களை பாராட்டுகிறேன். மரியாதை செலுத்துகிறேன். காவல் பணியில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார் குஷ்பு. சொந்த கதையை சொல்லி எப்படியோ தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்து 120 பெண் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தனது சொந்த கதையை பேசி ஒருவழியாக அனைவரையும் கவர்ந்து விட்டார் குஷ்பு. ட்விட்டரில் நன்றி இந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்த கேரளா முதல்வர் உம்மன் சாண்டிக்கும், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் சந்திரிகாவிற்கும் ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் குஷ்பு. அடடே உடையும் மாறிப்போச்சே வழக்கமாக குஷ்பு எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தனது வலது கையில் குத்தியுள்ள டாட்டூ தெரியும்படிதான் ப்ளவுஸ் அணிவார். பின்பக்கமும் தோளில் குத்தியுள்ள டாட்டூ தெரியும். ஆனால் சோனியா, ராகுலை சந்திக்கும் போது கூட இதேபோலத்தான் உடை அணிந்திருந்தார். ஆனால் கேரளா விழவில் பங்கேற்ற போதும், இன்றைக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த போதும் முழங்கையை தொடும் அளவிற்கு ப்ளவுஸ் அணிந்து வந்திருந்தார். அரசியல்வாதிகள் ஸ்டைல் பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் முழங்கையை தொடும் அளவிற்கே ப்ளவுஸ் அணிகின்றனர். அரசியல்வாதியாக இருந்தாலும் இதுநாள்வரை ஒரு நடிகையைப் போலவே உடை அணிந்திருந்த குஷ்பு, தேசிய கட்சியில் இணைந்த உடன் பெண் அரசியல்வாதிகளைப் போல உடை அணியத் தொடங்கிவிட்டா என்று பேசிக்கொண்டனர் காங்கிரஸ் கட்சியினர். டாட்டூவை பார்க்க முடியாதா பாஸ்? குஷ்புவைப் போலவே அவரின் டாட்டூ பிரபலபமானது. இவரின் உடை ஸ்டைல் மாறியதால் இனி டாட்டூ தரிசனம் கிடைக்காதே என்று சத்தியமூர்த்தி பவன் பக்கம் பலரும் ஏக்கப்பெருமூச்சு விடுவதை கேட்க முடிகிறது.

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: