புதன், 23 ஏப்ரல், 2014

தன்பாலின உறவு வழக்கு: வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2009 ஜூன் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன்பாலின உறவில் ஈடுபடுவது குற்றம், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்நிலையில் தன்பாலின உறவு குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து நாஸ் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இதைத் தொடர்ந்து சீராய்வு மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், சீராய்வு மனுவை வெளிப்படையாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: