வியாழன், 24 ஏப்ரல், 2014

அங்கீகாரமில்லாத 2000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தடை !

நாகர்கோவில்: தமிழகம் முழுவதும் அங்கீகாரமின்றி செயல்படும் 723  பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு  அனுமதி பெறாமல் செயல்படும் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள்  மீது நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பான விபரங்கள் அனைத்து மாவட்ட தொடக்க கல்வி  அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்  அங்கீகாரமின்றி செயல்படும் 1296 மழலையர் மற்றும் தொடக்க  பள்ளிகளில் 723 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.இந்த பள்ளிகளில் அடுத்த 2014-15 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை  நடைபெறாத வகையிலும், இப்பள்ளிகளில் பயின்று வரும்  மாணவர்களை அடுத்த கல்வியாண்டில் அருகில் உள்ள அரசு  அங்கீகாரம் பெற்ற பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinakaran.com

கருத்துகள் இல்லை: