வியாழன், 24 ஏப்ரல், 2014

AmWay ஆம்வே' நிறுவன பெட்டி மூலம் பணம் வினியோகம்

ஈரோடு: ஈரோடு, ஆவின் இயக்குனர் வீட்டில், 51 லட்சம் ரூபாய் மற்றும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க.,வினர் பணம் பட்டுவாடா செய்ததாக பிடிபட்டபோது, பணம் வைத்திருந்த பெட்டிகளில், 'ஆம்வே' நிறுவனத்தின், பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. <>பல இடங்களில் பணம்:< ஏற்காடு இடைத்தேர்தல் போல, 16 பேர் கொண்ட, பூத் கமிட்டி ஏற்படுத்தி, ஏ - அ.தி.மு.க., பி - பிறகட்சிகள், சி - கட்சி சாராத பொது, எனக் கணக்கெடுத்து, அ.தி.மு.க.,வினர் பணம் வினியோகித்ததாக புகார் எழுந்தது. புகாரையடுத்து, ஈரோட்டில், ஆவின் இயக்குனர் அசோக்குமார் வீட்டில், 51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ஈரோடு, பெரியசேமூரில், டூவீலரில் வைத்து வினியோகித்த, 25 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மாநிலம் முழுவதும், பட்டுவாடா செய்தபோது, பல இடங்களில் பணம் பிடிபட்டது. விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில், கணக்கில் வராத பணம் என, 240 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சேலம், ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில், ஆளுங்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்தபோது பிடிபட்டு உள்ளனர். விசாரணையில், அ.தி.மு.க.,வினரிடம் பணம் பறிமுதல் செய்தபோது, பணம் வைத்திருந்த பெட்டி அனைத்தும், 'ஆம்வே' நிறுவனத்தின், பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டிய பெட்டிகளாகவே இருந்தன.


பெட்டி சிக்கியது:

மாவட்டந்தோறும், ஆம்வே பொருட்கள் சப்ளை பெயரில், பணத்தை அனுப்பியுள்ளனரா என்பது, இரண்டாம் கட்ட விசாரணையில் தெரியவரும். சில மாதங்களுக்கு முன், ஆம்வே நிறுவனம், தமிழகத்தில் தொழிற்சாலை துவங்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க.,வினரின் பணம் பட்டுவாடாவின்போது, ஆம்வே நிறுவன பெட்டி சிக்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு ஆவின் இயக்குனர் அசோக்குமார் வீட்டில், ஆம்வே ஸ்டிக்கர் ஒட்டிய பெட்டியில், 'சிவகுமார், கிளப் மௌாஞ்ச், 34016 பார் 2 சி.ஓ.டி.,' என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர். dinamalar.com

கருத்துகள் இல்லை: