ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

ஒரு ரூபாய்க்கு ஒரு மீட்டர் நிலம் வீதம் தொழிலதிபர் அதானிக்கு 35,000 ஏக்கர் பறித்துக் கொடுத்த மோடி.


நரேந்திர மோடி 'குஜராத் மாதிரி' வளர்ச்சி பற்றி பேசுகிறார். ஆனால் அங்குள்ள ஏழை விவசாயிகளிடம் 35,000 ஏக்கர் நிலத்தை ஒரு மீட்டர் ஒரு ரூபாய் வீதம் தொழிலதிபர் அதானிக்கு பறித்துக் கொடுத்திருகிறார். 
குஜராத் மாநிலத்தில் விவசாய நிலங்களை பறித்து பெரும் முதலாளிகளுக்கு ஒரு மீட்டர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு கொடுத்ததாக நரேந்திர மோடியை விமர்சித்து பேசியுள்ளார் ராகுல் காந்தி.
அசாம் மாநிலம் நாகான் தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்: "நரேந்திர மோடி 'குஜராத் மாதிரி' வளர்ச்சி பற்றி பேசுகிறார். ஆனால் அங்குள்ள ஏழை விவசாயிகளிடம் 35,000 ஏக்கர் நிலத்தை ஒரு மீட்டர் ஒரு ரூபாய் வீதம் தொழிலதிபர் அதானிக்கு பறித்துக் கொடுத்திருகிறார்.
இந்த நிலத்தைப் பெற்ற அதானி, ஒரு மீட்டர் ரூ.3000-க்கு விற்றுள்ளார். இதன் மூலம் அதானி நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதைத் தான் 'குஜராத் மாதிரி' வளர்ச்சி என கூறுகிறார் மோடி.
நீங்கள் அதானி குழுமத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ஒரு மிட்டாய் கொடுத்துவிட்டு ஒரு மீட்டர் நிலத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஒரு மிட்டாய் விலை ஒரு ரூபாய் மட்டுமே. மோடி கூறுவது போல் ஒரு தனி மனிதரால் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்தே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என ராகுல் பேசினார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: