வெள்ளி, 25 ஏப்ரல், 2014

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர்
ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அவர்களுட்ன, இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காங்கிரஸ் வலை சிபிஅய் எப்படி இயங்குகிறது என்பது ஒன்றும் உலக மகா ரகசியம் அல்ல 
இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து டெல்லி நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி முடிவு எடுக்கும்.
முன்னதாக, இந்த வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ஆஜராகி, வாக்குமூலம் அளிப்பதாக இருந்தது.
இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ராசா, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால், வாக்குமூலத்தை எழுத்து வடிவில் பதிவு செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார்.
"நீதிமன்றம் தரப்பில் தரப்பட்டுள்ள 824 பக்கங்களில் உள்ள 1,718 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் மற்றும் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுவதால் கால அவகாசம் அளிக்க வேண்டும்" என்று அவர் கேட்டார். அதற்கு சம்மதித்த நீதிபதி ஓ.பி.சைனி, "இனிமேல் அவகாசம் கேட்க கூடாது" என்று எச்சரித்து வழக்கினை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: