வியாழன், 24 ஏப்ரல், 2014

தயாநிதிமாறன் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் 'கெடு'!

டெல்லி: ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக தயாநிதிமாறன் மிரட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தயாநிதி மாறன் வழக்கு தொடர்பாக மே 1ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: