அஞ்சலிக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. சினிமா கால்ஷீட் உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட
அனைத்து விஷயங்களையும் அவரது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டேன். வழக்குகளை
வாபஸ் வாங்குவது குறித்து நான், எனது அக்கா, அஞ்சலி எல்லோரும் கலந்து பேசி
ஒரு முடிவெடுப்போம்’’ - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலியின் சித்தி
பாரதி தேவி. ‘’நான் யார் மீதும் குறைகூற விரும்பவில்லை. இனி, என்னைப்
பற்றிய விஷயங்களை நானே கவனித்துக் கொள்வேன். இனி, என்னை மையப்படுத்தி எது
நடந்தாலும் அது என்னைச் சேர்ந்தது” - இப்படிச் சொல்லி இருக்கிறார் அஞ்சலி.
கடந்த வாரத்தில் இரண்டு தரப்பிலும் இருந்த கோபமும் கொந்தளிப்பும் இப் போது
இல்லை. ’குடும்பப் பிரச்னையை வீதிக்கு கொண்டு வராதீர்கள்” என்று இரண்டு
தரப்பையுமே யாரோ பக்குவப்படுத்தி இருக்கிறார்கள். அதனால் தான் இந்த
மாற்றம். கத்தாரில் இருக்கும் அஞ்சலியின் அம்மா பார்வதி தேவி, மிக விரைவில்
சென்னைக்கு வருகிறார். இதையடுத்து, அஞ்சலிக்கும் அவரது
சித்திக்குமான உரசல் முடிவுக்கு வருவதற்கான முகாந்திரம் உருவாகிக்
கொண்டிருக்கிறது. ’’இனி, மீடியாக்கள் மத்தியில் தோன்றினாலும், பெரிதாக யார்
மீதும் பழிபோட்டு பேசமாட்டார் அஞ்சலி. ‘அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக
நினைத்து மறந்துவிட்டேன்” என்று மட்டும் அவர் சொல்லக் கூடும்” என்கிறார்கள்
விவரமறிந்த சினிமா புள்ளிகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம்...
தன்னை ஸ்டாராக்கிய சித்திக்காக அத்தனையையும் பொறுத்துக் கொண்டிருந்த
அஞ்சலி, பொங்கி வெடித்தது யாருடைய தைரியத்தில்? ’சீத்தாம்மா வாகித்லோ
ஸ்ரீமல்லே சேத்து” தெலுங்கில் அஞ்சலி நடித்து சக்கைப் போடு போட்ட படம்.
இந்தப் படத்தில் ரேவதி, ரோகிணி மாதிரியான குணசித்திர வேடம் தான்
அஞ்சலிக்கு. இவருக்கு ஜோடி வெங்கடேஷ். ஹீரோ மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக
நடித்தார் அஞ்சலி. சூப்பர் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்த வெங்கடேஷுக்கு
அண்மைக்காலமாக அடுத்தடுத்து படங்கள் ஊத்திக் கொண்டன. அதற்கு காரணம் அவரது
உடல் வாகு என்கிறார்கள்.
மனுஷன் அநியாயத்துக்கு வெயிட் போட்டுவிட்டதால் இளம் ஹீரோயின்கள் தமன்னா,
சமந்தா உள்ளிடவர்கள் வெங்கடேஷ் படம் என்றாலே தலைதெரிக்க ஓடுகிறார்கள்.
இப்படியான சூழலில், வெங்கடேஷுக்கு ஜோடியாக சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே
சேத்துவில் நடிக்க சம்மதிக்கிறார் அஞ்சலி. இந்தப் படத்திற்காக அஞ்சலிக்கு
பேசப்பட்ட சம்பளம் 40 லட்சம். படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி நடந்து கொண்ட
விதம் வெங்கடேஷுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. அதுவுமில்லாமல், தொடர்ந்து
தோல்வி முகத்தில் போய்க்கொண்டிருந்த தன்னுடைய சினிமா வாழ்க்கையில்,
சீத்தாம்மா படம் ஒரு பிரேக்கை கொடுத்ததும் அஞ்சலியை வாயாற புகழ
ஆரம்பித்தார் வெங் கடேஷ்.
இதனால், தன்னுடைய அடுத்த படமான ஹிந்தி ரிமேக் ‘போல் பச்சனிலும்” அஞ்சலிக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுத்தார். இதில் அஞ்சலியின் சம்பளம் 60 லட்சம் என்கிறார்கள். இரண்டு
படங்களில் சேர்ந்து நடித்த அனுபவம் அஞ்சலிக்கும் வெங்கடேஷிற்கும் இடையில்
இழையோடிய நட்பை பலப் படுத்தியது. இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு தங்களது
கஷ்ட நஷ் டங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதற்கு முன்பு, மு.க. அழகிரியின்
மகன் துரை தயாநிதி தயாரிப்பில் வெளிவந்த ’தூங்கா நகரம்’படத்தில் நடித்துக்
கொண்டிருந்த போது, அஞ்சலிக்கு ஒரு பிரச்னை. அவரை தன் கட்டுப் பாட்டிலேயே
வைத்திருக்க துடித்த ஒரு இயக்குநர், தொடர்ந்து பல வழிகளில் டார்ச்சர்
கொடுத்தார். இதனால் மூடவுட்டாகிப் போய் உட்கார்ந்திருந்தார் அஞ்சலி.
தூங்கா நகரம் யூனிட்டில் இந்த விஷயம் காட்டுத் தீயாய் பரவியது. துரை
தயாநிதியின் படக் கம்பெனியை அழகிரியின் மருமகன் வெங்கடேஷ் தான்
கவனிக்கிறார். அவருக்கு இந்த விஷயம் போய், நேரடியாக அஞ்சலியை அழைத்து
விசாரித்தார். அந்த இயக்குனரின் டார்ச்சரை சொல்லி புலம்பிய அஞ்சலி, ‘இது
என்னுடைய பர்சனல். நானே பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சீரியஸாக்கி
விடாதீர்கள்” என்று சொன்னாராம். ஆனாலும், வெங்கடேஷ் தரப் பிலிருந்து அந்த
இயக்குனரை கூப்பிட்டு ’அன்பாக” கண்டித்து விட்டார்களாம். கொஞ்ச நாட்கள்
அமைதி. பிறகு, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.
அஞ்சலி மீது அளவு கடந்த கவனிப்பு வைத்திருந்த அந்த இயக்குனர், தன்னை
மீடியாக்காரர்கள் யாராவது சந்திக்க வந்தால், ‘அஞ்சலி தான் என்னோட படத்துல
ஹீரோயின். அவங்கள பேட்டி எடுத்து ஃப்ளாஷ் பண்ணுங்க பாஸ்” என்று அஞ்சலிக்கு
விளம்பர வெளிச்சம் தேடினார். ஆனால், அவரின் இந்த சிபாரிசுகளை எல்லாம்
அஞ்சலி சுத்தமாய் விரும்பவுமில்லை; ரசிக்கவுமில்லை. ’அந்த இயக்குனர் தான்
உங்களை பேட்டி எடுக்கச் சொன்னார் மேடம்” என்று யாராவது போன் போட்டால்,
‘அவன் தான் சொல்லிவிட்டானா?’ என்று எரிந்து விழுந்து வேண்டா வெறுப்பாக
பேட்டி கொடுத்தார் அஞ்சலி.
இந்தச் சூழலில், தெலுங்கு பட உலக அறிமுகமும் அங்கே தனக்குக் கிடைத்த
ஹிட்டும் அஞ்சலிக்கு புதுத் தெம்பை தந்தது. எக்ஸ்ட்ரா போனஸாக நடிகர்
வெங்கடேஷின் கரிசன பார்வையும் கிடைத்ததால் உற்சாகமானார் அஞ்சலி. ஆனால்,
அங்கேயும் போய் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்கள். தனக்கு பாதுகாப்புக்
கொடுப்பார் என்கிற நம்பிக்கையில், தான் தினமும் முள் படுக் கையில்
படுத்துப் புரளும் ரணத்தை வெங்கடேஷிடம் சொல்லி ஆறுதல் தேடி னார் அஞ்சலி.
’’உன்னை வைத்துத்தானே அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ் கிறார்கள். பணிந்து போக
வேண்டியவர்கள் அவர்கள் தான். நீ எதற்காக பயப்பட வேண்டும்? இனி இந்தப்
பிரச்னைகளை நான் பார்த்துக் கொள் கிறேன்” என்று தைரியம் கொடுத்தார்
வெங்கடேஷ். இப்போது புரிகிறதா அஞ்சலி யாருடைய தைரியத்தில் பொங்கி
வெடித்தார் என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக