ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

காங்கிரஸ் அதிமுக உறவு துளிர்கிறது ! அரசியலில் இதெல்லாம் சகஜமுங்கோ

தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில்,  
அ.தி.மு.க., பக்கம், காங்கிரஸ் செல்கிறது. சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், இதற்கான அச்சாரம் போடப்படுகிறது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதால், எப்போது கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஐ.நா., சபை மனித உரிமை ஆணையத்தில், இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு எடுத்த முடிவை, சாதகமாக்கிக் கொண்டு, கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியது.தமிழகத்தில், பிரதான கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆகியன, தங்களுக்கு எதிராக இருந்தால், பெரும் தோல்வியை, லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் சந்திக்க வேண்டி வரும் என்பதால், ஏதாவது ஒரு திராவிட கட்சியின் தோளில் ஏற, காங்கிரஸ் முயற்சிப்பது வழக்கமான ஒன்று. கூட்டத்தொடர்:இந்த நிலையில், தி.மு.க., வெளியேறிய நிலையில், அ.தி.மு.க., பக்கம் போவதற்கான, காய்களை நகர்த்தி வருகிறது. இதில், கொஞ்சம் வெற்றியும் பெற்று வருவதாக, அக்கட்சி நினைக்கிறது. தற்போது, நடந்து கொண்டிக்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், இதற்கான முனைப்புகளை, காங்கிரஸ் காட்டுகிறது.காங்கிரசிடம் ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். இவர்களின், ஆதரவு அல்லது எதிர்ப்பால், ஆளும் அ.தி.மு.க.,வுக்கு எவ்வித லாபமோ, நஷ்டமோ இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆதரவு, தமிழக அரசுக்கு முக்கியமாக உள்ளது. குறிப்பாக, மாநில அரசின் திட்டங்களுக்கு நிதி பெறுதல், மின்சாரத்தை வெளிமாநிலங்களிருந்து, தமிழகத்துக்கு கொண்டு வர பாதை அமைத்தல், அண்டை மாநிலங்களுடன் இருக்கும் பிரச்னைகளைத் தீர்த்தல் போன்றவற்றுக்கு, மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது.
அதிமுக என்னதான் கொள்கை வேஷம் போட்டாலும் பசித்தால் எந்த கருமத்தையும் உண்பதுதானே வழக்கம் 

காங்கிரசுக்கு சங்கடம்:
இதுவரை, தி.மு.க., கூட்டணியில் இருந்ததால், அதன் நேர் எதிர்க் கட்சியான, அ.தி.மு.க., அரசுக்கு உதவுவது, காங்கிரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வந்தது. தி.மு.க., வெளியேறிவிட்ட நிலையில், அ.தி.மு.க., வுக்கு உதவுவதில், எவ்வித சிக்கலும், காங்கிரசுக்கு இல்லை.அதனால், இரு கட்சிகளும், சட்டசபையில் நெருங்கி வரும் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அ.தி.மு.க., அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் வாழ்த்திப் பேசுவதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். சட்டசபை விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. காங்கிரசோ, வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.


முதல்வருக்கு வாழ்த்து:
காங்கிரசின் சட்டசபை தலைவர் கோபிநாத், முதல்வருக்கு, தெலுங்கு ஆண்டு பிறப்பு வாழ்த்துக்களை சட்டசபையில் பேசும் போது தெரிவித்தார். காங்கிரசின் பெண் எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசுகையில், ""மாநில அரசின் கோரிக்கைகளை, காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு செல்வோம். கூடுதல் நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்போம்,'' என, கூறினார். விஜயதாரணியின் பேச்சை, மேஜையை தட்டி, அ.தி.மு.க.,வினர் வரவேற்றனர். காங்கிரசின் குளச்சல் எம்.எல்.ஏ., பிரின்சை, "செல்லதம்பி பிரின்ஸ்' என, முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டது, பெரும் அதிர்வலையை, சட்டசபையில் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அ.தி.மு.க., ஆதரவு நிலையை எடுத்துள்ள காங்கிரசுக்கு, சட்டசபையில் பேச அனுமதிப்பதை, அ.தி.மு.க., தாராளப்படுத்திஉள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: