திங்கள், 15 ஏப்ரல், 2013

லண்டனில் இந்தியப்பெண் 2 மகள்களுடன் மர்ம மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

லண்டனில் இந்திய வம்சாவளி பெண், தனது 2 மகள்களுடன் மர்ம மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இங்கிலாந்தின் மேற்கு லண்டன் பகுதியில் உள்ளது ருயிஸ்லிப். இந்நகரின் மிட்கிராப் என்ற பகுதியில் வசித்தவர் ஹீனா சோலங்கி (34). இவருடைய கணவர் கல்பேஷ் (42). இவர்களுடைய மகள்கள் ஜேஸ்மின் (9), பிரிஷ் (4). கல்பேஷின் பெற்றோரும் விடுமுறைக்காக வந்திருந்தனர். அவர்களும் வீட்டில் தங்கியிருந்தனர். ருயிஸ்லிப் பகுதியில் உள்ள பள்ளியில், ஆய்வக டெக்னீஷியனாக பணியாற்றினார் ஹீனா.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஹீனா வீட்டில் இருந்து கேஸ் வாசனை வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார், தீயணைப்புத் துறையினர், மருத்துவ குழுவினர் விரைந்து சென்றனர். வீட்டுக்குள் சென்ற போது ரசாயன வாசனை வீசியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கதவு, ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படி போலீசார் உத்தரவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.வீட்டில் சோதனை செய்த போது, ஹீனா சோலங்கி மற்றும் இவருடைய மகள்கள் ஜேஸ்மின், பிரிஷ் ஆகியோர் இறந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரிய வரும். அதுவரை காரணம் கூற இயலாது என்று போலீசார் கூறினர்.


ஆனால், Ôபள்ளி ஆய்வகத்தில் ஹீனா பணியாற்றியதால், ரசாயன கேஸ் பற்றி நுணுக்கங்களை தெரிந்து வைத்திருப்பார். அதனால், கேஸ் மூலம் அவர் தனது 2 மகள்களை முதலில் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம்Õ என்று கூறுகின்றனர். எதற்காக அவர் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் இருந்து எந்த கடிதமும் சிக்கவில்லை. பேஸ்புக்கை ஆய்வு செய்த போது, குஜராத் மாநில பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு வரை படித்துள்ளது தெரியவந்தது. ஹீனா வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், Ôஹீனா குடும்பம் மிகவும் நல்ல குடும்பம். குழந்தைகளை அவர் நல்லபடி வளர்த்து வந்தார். அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரசாயன பொருட்களுடன் வீட்டுக்குள் சென்றதை பார்த்தேன்Õ என்று போலீசில் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: