வியாழன், 28 ஜூன், 2012

திருநங்கை Swetha குடும்ப சொத்தில் பங்கு கேட்டுபோராட்டம்

சென்னை: குடும்ப சொத்தில் தமக்கு பங்கு கேட்டு ஸ்வேதா என்ற திருநங்கை தமது தோழிகளுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஸ்வேதா என்ற திருநங்கைதான் தமது குடும்ப சொத்தில் பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கியுளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்வேதா கொடுத்துள்ள புகார் மனுவில், காசிமேட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்கள் இருக்கிறது. திருநங்கை என்பதால் தமக்கு உரிமை என்று சித்தி விரட்டி அடிக்கிறார். தமக்கு சொத்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா, எனக்கு குடும்ப அட்டை உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால் குடும்ப சொத்தில் மட்டும் பங்கு தரமுடியாது என்று சித்தி சொல்கிறார். திருநங்கைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உண்டு, என்பதை நிரூபிக்க நான் இந்த போராட்டத்தை நடத்துகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: