வெள்ளி, 29 ஜூன், 2012

பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி


Vaigai Selvan - Chennai,இந்தியா
2012-06-29 02:37:36 IST Report Abuse
இதைத்தான் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய காங்கிரஸ் கட்சியின் கிவ் அண்ட் டேக் பாலிசி என்கிறார்கள்.. மானங்கெட்ட சில ஜென்மங்கள்..

புதுடில்லி: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததற்கு பிரதிபலனாக, 12ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு, 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
டில்லியில், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., என்.கே.சிங், நேற்று முன்தினம் அளித்த விருந்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கும்படி, மாண்டேக் சிங் அலுவாலியாவிடம், முதல்வர் நிதிஷ் கோரிக்கை விடுத்தார். இதை, அவரும் ஏற்றுக் கொண்டார். கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், பீகாருக்கு, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2012-2017ம் ஆண்டுக்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பீகாருக்கு, 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க, திட்ட கமிஷன் சம்மதித்துள்ளது.
வரும் ஐந்தாண்டு திட்டத்திலேயே, சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்த, திட்ட கமிஷன் தலைவர் அலுவாலியா, ""வளர்ந்த மாநிலங்களுடன் இணைந்து, பீகார் வேகமாக முன்னேறி வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார். அவரது கோரிக்கை ஏற்கப்படுகிறது. முடிந்த வழிகளில் உதவ, திட்ட கமிஷன் தயாராக உள்ளது. விரைவில், மத்திய அமைச்சரவையில் நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் பெறப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை: