மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் ’கடல்’ படத்திற்கும் ரஹ்மான்தான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான இரண்டு பாடல்களுக்கு ரஹ்மான் ஏற்கனவே இசையமைத்துவிட்டார்.கடல் படத்திற்கு கடல் மார்க்கமாக சென்று பாடல்களை பற்றி விவாதித்துள்ளனர். கடல், மணிரத்னம் இதற்கு முன்பு எடுத்த ரோஜா படத்தின் மறுபதிப்பாக இருக்குமா? என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. கடல் படத்தில் ஹீரோவாகநடிக்கும் கௌதம் நடிகர் கார்த்திக்கின் மகன்.ஹீரோயினாக நடிக்கும் சமந்தா இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த படம் ரிலீசான பிறகு தான் மற்ற படங்களை ஒப்புக் கொள்வேன் என்று கூறிக் கொண்டிருப்பதாக தகவல். இவர்களைத் தவிர பசுபதி, லக்ஷ்மி மஞ்சு, நேஷனல் அவார்டு வாங்கிய தம்பி ரமையா ஆகொயோர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக