சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் மோதல் நீடித்து வருகிறது. நடிகர் கார்த்தியின் படத்துக்கு இடையூறு செய்ததாகக் கூறி பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள். நேற்று சென்னையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர் அழைப்பை தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு பெப்சி சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பெப்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதெல்லாம் தங்களை பயமுறுத்த தயாரிப்பாளர் செய்யும் வேலை என்று கூறியுள்ளனர் பெப்சி நிர்வாகிகள்.
இயக்குநர் அமீர் பெப்சி தலைவர் எம். ராமதுரை, பொதுச் செயலாளர் ஜி. சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், "1996-ல் திரையுலகில் நடந்த ஸ்டிரைக் 7 பேர் உயிர் போக காரணமாக அமைந்தது. பெப்சியை உடைத்து உயிர்ப்பலி ஏற்படும் நிலையை உருவாக்கக் கூடாது. தயாரிப்பாளர்களுடன் 4 வருடமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வருகிறோம். ஆனால் சம்பளத்தை உயர்த்த மறுக்கின்றனர்.
தயாரிப்பாளர் சங்கம் பெப்சியையும் அமீரையும் குற்றச்சாட்டி அறிவித்த படப்பிடிப்பு ரத்து என்பது நடைபெறவே இல்லை. நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 34 படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்தன. தயாரிப்பாளர் சங்கம் படம் எடுக்காதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
40 ஆண்டுக்கும் மேலாக பாரம்பரியம் பெற்று மூன்று முதல்வர்களால் வார்த்தெடுக்கப்பட்ட பெப்சியை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என சவால் விடுவதை கண்டிக்கிறோம். 15 சங்கங்கள் ஊதிய உயர்வு பேசி முடிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் நல ஆணையத்தையும் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசையும் உதறி விடுவது போன்று நடப்பது சரி அல்ல.
உண்மையான தயாரிப்பாளர்களுக்கு பெப்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பெப்சியை உடைக்க யார் முயன்றாலும் உயிரை கொடுத்து காப்போம். முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்தித்து பேசுவோம்," என்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக