ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பணத்தை வாங்கிக் கொண்டு பதவி கொடுத்து விட்டனர் தேமுதிகவினர் குமுறல்

Vijayakanth
சென்னை: 28 வருடமாக விஜயகாந்த்துக்கும், அவரது ரசிகர் மன்றத்துக்கும், தேமுதிக கட்சிக்கும் உழைத்த எங்களை மோசடி செய்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்து விட்டனர் என்று சென்னையைச் சேர்ந்த தேமுதிகவினர் குமுறியுள்ளனர்.
தேமுதிகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. கிளை, பேரூராட்சி, வட்டம், பகுதி, மாவட்டம் தேர்தல் முடிவுற்று அதற்கான நிர்வாகிகளை கட்சித் தலைமை அறிவித்து வருகிறது.இந்த நிலையில், சென்னையில் தற்போது உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. பணம் வாங்கிக் கொண்டு பதவியைக் கொடுத்து விட்டதாக தொண்டர்கள் பலர் குமுறியுள்ளனர்.

தென் சென்னை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென் சென்னை மாவட்டத்திற்கு ஏ.எம்.காமராஜ் செயலாளராகவும், கிழக்கு மாவட்டத்திற்கு வி.என்.ராஜன் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டது. இதில் தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் அடங்கிய பகுதி நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக விஜயகாந்த் மன்றத்திலும், கடந்த 6 வருடங்களாக கட்சியிலும் இருந்து பாடுபட்ட நிர்வாகிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், கடந்த 22 ஆண்டுகளாக விஜயகாந்த் மன்றத்தில் நிர்வாகிகளாக நாங்கள் பணியாற்றி உள்ளோம். இது கட்சி தலைமைக்கும் தெரியும். தற்போது இந்த மாவட்டத்தில் தேர்தலே நடத்தாமல் மாவட்ட செயலாளர் வி.என். ராஜன் தன்னிச்சையாக ஒரு பட்டியல் தயார் செய்து கட்சி தலைமைக்கு கொடுத்துள்ளார்.

கட்சி தலைமையும் பழையவர்கள் யார்? புதியவர்கள் யார்? என்று விசாரணை நடத்தாமல் புதியவர்களுக்கு பதவி அளித்துள்ளனர். இது குறித்து நாங்கள் தலைமையிடம் கேட்டால் அவர்கள் கொடுக்கும் விளக்கம் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை.

கிளை, பகுதி நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது. ஆனால் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக அறிவித்திருக்கும் வி.என்.ராஜன் மத்திய சென்னை பகுதியில் வசிக்கிறார். அவருக்கு மட்டும் மாவட்ட செயலாளர் பதவி. இது என்ன நியாயம்.

இந்த மாவட்டத்தின் செயலாளர் கொடுத்த பட்டியலை கட்சி தலைமை அப்படியே அறிவித்திருக்கிறது. மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் மற்ற நிர்வாகிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்றனர்.

இதேபோல் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சோழிங்கநல்லூர் தொகுதியை தேமுதிக தென் சென்னையுடன் இணைத்துள்ளது. சோழிங்கநல்லூர் தற்போது சென்னை நகருக்குள் வந்து விட்டதால் இந்த இணைப்பு என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதியிலும் தேமுதிக அமைப்புத் தேர்தலை நடத்தாமல் பகுதிச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளை மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் சோழிங்கநல்லூர் தொகுதியை தென் சென்னையில் இணைத்தது காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் எம்எல்ஏவுக்கு தெரியாமல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அனகை முருகேசனிடம் கலந்து ஆலோசிக்காமல் வி.என்.ராஜன் தன்னிச்சையாக சோழிங்கநல்லூர் பகுதி நிர்வாகிகள் பட்டியலை கட்சி தலைமையிடம் அளித்து பதவி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூர் பகுதியில் 22 வருடமாக விஜயகாந்த் மன்றத்திற்கும், பின்னர் 6 வருடமாக தேமுதிகவிற்கும் உழைத்த தொண்டர்களுக்கு எந்தவிதமான பதவியையும் வழங்கப்படாததால் அவர்கள் கொந்தளிப்புடன் காணப்படுகிறார்கள்.

கட்சித் தலைவர் விஜயகாந்த் தலையிட்டு மன்றத்திற்காகவும், கட்சிக்காகவும் 28 வருடங்களாக உழைத்து வரும் பழையவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார்கள் கட்சியின

கருத்துகள் இல்லை: