சென்னையில் ஆண்டுதோறும் தமிழர் புத்தாண்டாம் பொங்கல் திருவிழாக்களையொட்டி நடத்தப் பெறும் தமிழ்ப் புத்தகங்களின் கண் காட்சியில், இவ்வாண்டு 57 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன; பல கோடி ரூபாய்களுக்கான விற்பனை மூலம், தமிழ்ப் புத்தக வெளியீட்டா ளர்கள் பலரும் பயன் பெற்றுள்ளனர்.
இதைவிட முக்கியமான மற்றொரு அம்சம் என்ன தெரியுமா?
விற்பனையாளர்களுக்கு லாபம், எழுதியவர்களுக்கு மிகவும் ஊக்கந் தரும் பெருமிதம் - இவற்றையெல்லாம் விட, வாங்கிய புத்தகப் பிரியர்கள்தான் மிகுதியும் லாபம் அடையும் பயனாளிகள் ஆவர்!
என்ன திகைக்கிறீர்கள்?
புத்தகப் பிரியர்களுக்கு இதைவிட அறிவுக் கொள்முதல், அறிவுக்கான முதலீடு (investment for improving our intellect) வேறு உண்டா?
நல்ல அரம் போன்ற கூர்மையான நம் அறிவுக்குக்கூட சாணை தீட்டுவதற்கும், நமது வண்டி ஓட அதில் உள்ள பேட்டரி ரிசார்ஜ் ஆவதற்கும், நல்ல புத்த கங்களைப் படிப்பதும், அதை அசை போட்டு எண்ணிடுதலும், பிறகு அதை அப்படியே செரிமானம் செய்து கொள் ளுவதிலும் மிகவும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறதே!
திரைப்படங்களுக்குச் சென்று பார்த்து ரசித்து விட்டுத் திரும்பிய வுடன் அச்செலவு - பயன்தராத செலவேதான். அதற்குரிய சரியான (அறிவுபூர்வ) வரவு (Returns) நமக்கு வருவதில்லையே!
ஏதோ ஒரு சில இலட்சியப் படங்கள் இதற்கு - அத்தி பூத்தது போல - விலக்காக இருக்கலாம். அதனைப் பொது விதிபோல நாம் எடுத்துக் கொள்ள முடியாதே!
இப்போது இந்தப் புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ள உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. (எனக்கிருக்கும் மிகப்பெரிய நெருக்கடியே சேகரித்த புத்தகங்களை வீட்டில் வைக்க இடந்தேடி அலைய வேண்டியுள்ளது.) அதற்குப் பதிலாக இப்போது மின்னணுக் கருவிகள் -- i-pad போன் பேட் (Pad) களின் அல்லது Kindle என்ற அதே சிலேட்டு என்ற மின்னணுக் கருவி மூலம் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை = நூலகங்களுக்குச் சந்தா கட்டிப் படிப்பது போல, நாம் அந்த i-pad போன்ற சிலேட்டிலேயே படித்து வரலாமே!
E-Books என்ற மின்-புத்தகங்கள் அதன்மூலம் ஏராளம் கிடைக்கின்றன! போட்டி போட்டுக் கொண்டு பல கம்பெனிகள் (பன்னாட்டு நிறுவனங்கள்) இந்த மின் புத்தகங்களை எல்லோரும் படித்துப் பயன் பெறுமாறு எளிதாகச் செய்து விட்டன.
கம்ப்யூட்டர் - கணினி - புரட்சியால் இவர்கள் எதை எதையோ புதுமையான உத்திகளைப் பயன்படுத்தி நாளும் புதிய புகுத்தலைச் செய்து புதுயுகம் படைக் கின்றனர்.
அந்தப் புரட்சிக்கு அடித்தளம் அமைக்கவே புத்தகங்கள் நவீன அறிவாயுதங்களாகப் பயன்படுகின்றன!
சிறந்த புத்தகங்களை எப்படி அடையாளம் காண்பது? அதற்குரிய அளவுகோல் ஏதாவது உண்டா? என்று சில நண்பர்கள் கேட்பது எம் காது களில் விழுகின்றன!
வள்ளுவப் பெருந்தகை அதற்குரிய விடையைத் தந்து விட்டாரே!
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு - குறள் (783)
நல்ல நண்பர்கள் என்பவர்களிடம் மீண்டும் மீண்டும் பழகிட வேண்டும் என்ற அவா பீறிட்டுக் கிளம்புவது போலவே, நல்ல புத்தகங்களை மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பது போல என் கிறாரே! அதை விடவா நல்ல அளவு கோல் தேவை?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய அருமையான பாடல் -
நூலைப்படி, நூலைப்படி என்ற வரி களோடு மாணவ - மாணவியர்க்குக் கூறும் அறிவுரைக் கவிதை - அழகுக் கவிதையில்.
பொய்யிலே காற்படி, புரட்டிலே முக்கால்படி தரும் புத்தகங்களைப் படிக்காதீர்
என்றும் எச்சரிக்கை விடுத் துள்ளார்களே!
எனவே புத்தகங்களை நேசிப்பதை விட, சுவாசிப்பதையே பழக்கமாகக் கொள்ளுங்கள்! அகத்தூய்மைக்கு அதைவிட சிறந்த மருந்து - டானிக் - வேறு கிடையாதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக