‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும். நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?
சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.
இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.
கடையின் உரிமையாளர், அவர் மனைவி, தம்பிகள், வயதான தந்தை என்று 6 குடும்ப உறுப்பினர்கள் கடை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆள் மாறி மாறி காலையில் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடை திறந்திருப்பதற்கு தேவையான வேலைகளை செய்கிறார்கள். இவர்களைத் தவிர சம்பளத்துக்கு இரண்டு பேர் வைத்திருக்கிறார். மொத்தம் 8 பேர் நேரடியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். சொந்தமாக வீடு கட்டி வசதியாகவே வாழ்கிறார்கள்.
மளிகைச் சாமான்கள், பால், காய்கறி, தண்ணீர், தின்பண்டங்கள் மற்றும் சகலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விற்கிறார்கள்.
உரிமையாளர் 4 மணிக்கு எழுந்து சந்தைக்கு காய்கறி வாங்கப் போவார். ஆறரை மணிக்கெல்லாம் ஒரு தம்பி வந்து கடையை திறப்பார். சந்தையிலிருந்து திரும்பி வந்தவரும் பொருட்களை எடுத்துக் கொடுக்க நிற்பார். காலை நேரம் சுறுசுறுப்பான நேரம். பால் வாங்க வருபவர்கள், அன்று வாங்கி வரும் காய்கறி வாங்கிப் போக வருபவர்கள் என்று பரபரப்பாக இயங்கும். அந்த நேரத்தில் வயதான தந்தையும் உதவிக்கு சேர்ந்து கொள்வார். பகல் வேளையில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் மாறி மாறி யாராவது ஒருவர் கடையில் இருப்பார்கள். தண்ணீர், பால், வீடுகளுக்கு பொருட்களை கொண்டு கொடுப்பது போன்ற வேலைகளை சம்பளத்துக்கு இருக்கும் இரண்டு பையன்கள் வேலை செய்வார்கள்.
இரவு 10.30 வரை கடை திறந்திருக்கும். ஓய்வாக இருக்கும் போது பொருட்களை அடுக்கி வைப்பது, கணக்கு எடுப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டியதுதான். வாரத்துக்கு 7 நாளும் உழைப்பு, வார விடுமுறை கிடையாது. தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகளுக்குப் போக வேண்டியிருந்தால் ஒழிய கடைக்கு விடுமுறை கிடையாது.
இது போன்ற கடைக்குப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் எத்தகையவை, அவற்றில் எவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள்?
சுமார் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் பொருட்களைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவற்றில் தயாரிப்பு நிறுவனங்களின் ஏஜன்சிகளும், நேரடியாக பொருட்களை தயாரித்து கொண்டு வருபவர்களும் அடங்குவார்கள்.
ஆச்சி மசாலா, சக்தி மசாலா, அரசன் சோப்பு, இதயம் நல்லெண்ணெய், பிராண்டட் பருப்பு வகைகள், எழுதுபொருட்கள் போன்ற பொருட்களுக்கான ஏஜன்சிகளில் சுமார் 5 முதல் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கடைகளுக்கு அவர்கள் பொருட்களை கொண்டு தருகிறார்கள். இத்தகைய ஏஜன்சிகளில் சேல்ஸ்மேன்கள், சப்ளையர்கள், சேல்ஸ் மேனேஜர்கள் போன்றவர்கள் கடைகளுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதையும், விற்ற பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வதையும் செய்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்வார்கள். அவை மாநிலம் முழுமைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அமைந்திருக்கலாம்.
இரண்டாவதாக, சேமியா, அப்பளம், ஜூஸ், சுக்கு, ஆசிட், லோசன், கடலை, ஓம திரவம், சிப்ஸ், தரை துடைப்பு, துடைப்பம், கற்கண்டு, முறுக்கு, பிஸ்கட், லோஷன், துடைப்பம், கடலை மிட்டாய், மெழுகுவர்த்தி, கருவாடு போன்ற பொருட்களை செய்து வழங்குபவர்கள். இவை பெரும்பாலும் குடிசைத் தொழில்களாக செயல்படுகின்றன. நகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வீடுகளில் பொருட்கள் செய்யப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. ஒரு மளிகைக்கடையில் விற்கப்படும் இத்தகைய பொருட்களை செய்யும் தொழில்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருட்களை டூவீலர் அல்லது சைக்கிளில் கொண்டு வந்து கடையில் போட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு போவார்கள்.
சுமார் 50 வகையான இத்தகைய பொருட்களை தயாரிப்பதில் ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. .
முட்டை கொண்டு வந்து தருபவர் கோழிப்பண்ணைகளிலிருந்து வந்து இறங்கும் முட்டைகளை மொத்தமாக வாங்கி சைக்கிளில் கட்டி எடுத்து வந்து கடைகளுக்குக் கொடுத்து விட்டுப் போவார். பால், மோர், தயிர் போன்றவற்றுக்கு ஆவின், ஆரோக்கியா ஏஜன்சிகளை கடைக்காரரே எடுத்திருக்கிறார். ஆவின் நிறுவனத்தின் மாநிலம் முழுவதற்குமான கூட்டுறவு பண்ணைகள், பால் பிடித்து வரும் வண்டிகள், பால் பதப்படுத்தும் தொழிலகங்கள், பால் கொண்டு வந்து போடும் ஊழியர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரிசி, உளுந்து, பருப்பு வகைகளுக்கு சில்லறையாக விற்பதற்கு மொத்தச் சந்தையிலிருந்து மூட்டையில் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அரிசி மண்டி, வெல்ல மண்டி, பயறு மண்டி என்று மொத்த வியாபாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலையில் காய்கறி சந்தைக்குப் போய் காய், பழம் வாங்கி வருகிறார் கடைக்காரர். லாரிகளில் தூரத்திலிருந்து வரும் காய்கறிகள் தவிர, சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வரும் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. சிறு விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பதற்கான முக்கியமான வழியை சில்லறை வணிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறாக மளிகைக் கடை சில்லறை வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நகரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதியினர் சுயமாக தொழில் செய்பவர்கள். இவர்களில் யாருக்குமே அரசு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வங்கிக் கடன்கள், மானியங்கள் போன்ற சலுகைகளும் சுத்தமாக கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க தமது உழைப்பு, சேமிப்பு, சமூக ஆதரவு மூலமாகவே இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களின் வருமானம், லாபம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது அல்லது முதலீடு செய்யப்படுகிறது. உதாரணமாக மளிகைக் கடைக்காரர் சம்பாதிக்கும் பணத்தை உள்ளூரிலேயே வீடு கட்ட, கடையை விரிவு படுத்த பயன்படுத்துவார். அது மறைமுகமாக அடுத்த சுற்று வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது. இப்படியாக, இந்தியா முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் சில்லறை வணிக துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் சில்லறை வணிகர்கள் பொருட்கள் வாங்குவதையே உலகமயமாக்கியிருப்பவர்கள். வால்மார்ட்டில் விற்கப்படும் பால் பாக்கெட் ஆவின் பாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விலை குறைவாக கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட, டெட்ராபேக் பாலை விற்க ஆரம்பிப்பார்கள். காய்கறிகள், முட்டை போன்றவற்றை ஒப்பந்த பண்ணை முறையில் பணக்கார விவசாயிகள் அல்லது முதலாளிகளிடம் ஒப்படைத்து சிறு விவசாயிகளையும், குடிசைத் தொழில்களையும் ஒழித்து விடுவார்கள். அரிசி, பருப்பு, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், பழங்கள் கூட குறைந்த விலையில் வால்மார்ட்டின் தரத்துக்கு கிடைக்கக் கூடிய எந்த நாட்டிலிருந்தாவது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.
இப்படி துரத்தியடிக்கப்படும் 15 கோடி மக்களுக்குப் பதிலாக சில ஆயிரம் பேரை கூலி உழைப்பாளிகளாக வைத்துக் கொள்வதுதான் வால்மார்ட் மக்களுக்கு வழங்கும் ஒரே வேலைவாய்ப்பாக இருக்கும். வால்மார்ட்டில் வேலை செய்வது என்பதன் பொருள் குறைந்த ஊதியம், ஓவர் டைம் கொடுக்காமல் அதிக நேரம் வேலை வாங்கப்படுதல், போதுமான மருத்துவ வசதிகள் மறுப்பு என்று பலவிதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதே ஆகும்.
‘வால்மார்ட்டில் குறைந்த விலை அல்வா கிடைக்கலாம், ஆனால் வால்மார்ட் அழித்து விடப் போகும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள், என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதது’ என்பது கார்பொரேட் சில்லறை வணிகத்தை அனுமதித்த பல நாடுகளின் அனுபவம்.
வால்மார்ட் சில்லறை வணிக குடும்பங்களை மட்டுமல்ல, அவர்களுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில்கள், சிறு, நடுத்தர விவசாயிகள், அத்தனை பேரையும் சேர்த்தே அழிக்கிறது. தூக்கி எறியப்படும் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த வாழ்க்கையை இழப்பதோடு மலிவான கூலியுழைப்பு சந்தையின் ரிசர்வ் சக்திகளாக அலைய வேண்டியிருக்கும்.
இந்த அழிவை தடுத்த நிறுத்தா விட்டால் அதன் சமூக, அரசியல் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் பிராயச்சித்தமாக வால்மார்ட்டை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். செய்வார்களா?
_______________________________________________
- செழியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக