Viruvirupu.comசங்கரன்கோவில் இடைத்தேர்தல் எரவுன்ட்-த-கார்னரில் தயாராக நிற்கும் நேரத்தில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-வின் தீவிர கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது விஜயகாந்தின் தே.மு.தி.க.! என்ன காரணம்? ஒருவேளை தே.மு.தி.க. ஜெயித்து விடலாம் என்ற பயமா?
அதெல்லாம் கிடையாது. வேறு வேறு விவகாரம்.
தமிழக அரசியல் அடுத்து எப்படித் திரும்பப் போகின்றது என்பதற்கான பதில், தே.மு.தி.க.-வின் சில நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது என்கிறார்கள்.
தனித்துப் போட்டியிடுவதாக (ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது) தே.மு.தி.க. வெளிப்படையாக கூறினாலும், உள்ளே வேறு ஒரு டீல் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம், அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளுக்கு உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் இருந்த விஜயகாந்தை போட்டியில் குதிக்க வைத்தது, ஜெயலலிதாவின் சட்டசபை ‘உசுப்பேற்றல்’ பேச்சு மட்டுமல்ல.
அதையும் தாண்டி, இதில் வேறு ஒரு விவகாரமும் உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் விஜயகாந்த், தி.மு.க.-வுடன் நெருங்கி வருவதற்கான சான்ஸ் கிட்டத்தட்ட ஃபைனல் ஸ்டேஜ்வரை வந்தபின், ‘சில காரணங்களால்’ திசை மாறியது. அதன்பின் தி.மு.க.-வும், தே.மு.தி.க.-வும் தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர். தி.மு.க.-வுடன் நெருங்கும் சான்ஸை கடைசி நிமிடத்தில் தட்டிவிட்டது விஜயகாந்த் தரப்புதான் என்பது எமக்கு கிடைத்த தகவல்.
தி.மு.க., தாம் பெரிய கட்சி என்ற பிரஸ்டீஜையும் பார்க்காமல், நன்றாகவே கீழிறங்கி வரத் தயாராக இருந்தது என்பதை தி.மு.க. வட்டாரங்கள் ஒப்புக் கொள்கின்றன. அப்படியிருந்தும் விஜயகாந்த் ஏன் தட்டிவிட்டார்?
தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் கதையின்படி, விஜயகாந்தின் முடிவின் பின்னணியில் இருப்பது, அவரது மனைவி பிரேமலதா. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர், “அந்தம்மா சொந்தமாக வேறொரு டீல் பேசி முடிச்சிட்டாங்க. அது நம்ம (தி.மு.க.) தலைமைக்கும் தெரியும்” என்றார்.
நாம் விசாரித்தவரை, தி.மு.க. பிரமுகரின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. இதற்குள் மற்றொரு டீல் ஓடத்தான் செய்கிறது.
விஜயகாந்துடன் நெருங்கிவர தி.மு.க. எந்தளவுக்கு கீழிறங்கி வர தயாராக இருந்தது? தி.மு.க. சோர்ஸ் தகவல்களின்படி, தமது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல், தே.மு.தி.க. வேட்பாளரை வெளிப்படையாக ஆதரிக்க தி.மு.க. தயாராக இருந்தது. அதுமட்டுமின்றி, தேர்தல் தே.மு.தி.க.-வின் செலவுகளை சமாளிக்க அறிவாலயம் ‘கணிசமாக கவனிக்க’ தயாராகவும் இருந்திருக்கிறது.
தி.மு.க.-வின் இந்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் கட்சிக்குள் அழகிரியின் எதிர்ப்பு இருந்தாலும், ஸ்டாலினின் பூரண ஆசி இருந்தது. அதுவே போதும் கூட்டணி உறுதியாகுவதற்கு. ஆனால், உறுதியாகவில்லை. (பாவம் அழகிரி, அவருக்கு இந்த விவகாரத்தில் எந்த பங்குமில்லை)
தி.மு.க.-வின் இந்த ஆதரவுக் கரத்தை பிரேமலதா தட்டி விட்டதன் காரணம், வேறு ஒரு தரப்பு தேர்தல் செலவுகளை ‘கவனித்துக் கொள்வதாக’ கூறி, இவர்களே மலைத்துப் போகும் அளவுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகைதான் என்கிறார்கள். (அட்வான்சே அவ்வளவு என்றால்…)
அந்தப் பணத்தை கொடுத்தது யாரோ என்றாலும், பணத்தின் பாயின்ட் ஆஃப் ஒரிஜின், சசிகலா குடும்ப வளையங்களில் ஒன்று என்பதே இதிலுள்ள சுவாரசியமான அம்சம். இதில் சசிகலாவின் தொடர்பு நேரடியாக இல்லை என்று தெரிகிறது. ஆனால், அவருக்கு விஷயம் தெரிந்தும், எதிர்ப்பு காட்டவில்லை என்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் ஹைலைட்டே, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் பேச்சுதான் என்கிறார்கள் தே.மு.தி.க. வட்டாரங்களில். அதில் அவரது பேச்சு முழுவதுமே காரசாரமாக அ.தி.மு.க.வை தாக்கும் வகையில் இருந்ததாகவும் தே.மு.தி.க.-வினர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு நேரடியாக சவால்விட்டு பிரேமலதா பேசிய ஆவேசப் பேச்சுக்குதான் பொதுக்குழுவில ஆரவார வரவேற்பு அதிகம் இருந்தது என்கிறார்கள்.
தே.மு.தி.க.-வுக்கு கிடைத்த இந்த ‘பின்னணி பைனான்ஸிங்’, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்பதை இப்போதே சொல்லிவிடலாம். பைனான்ஸ் பண்ணியவர்களுக்கே இது ஜெயிக்கிற குதிரை அல்ல என்பது தெரிந்திருக்கும்.
ஆனால், தமிழக அரசியலில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரக்கூடியது இந்த பைனான்ஸிங். தி.மு.க. அரசியல் ரீதியாகவும், அ.தி.மு.க. ஆளும்கட்சி என்ற ரீதியிலும் சில நகர்வுகளை அடுத்த சில தினங்களில் மேற்கொள்வதை பார்க்கப் போகிறீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக