இந்திய மக்களின் மிதமிஞ்சிய கடவுள் நம்பிக்கையைப் பற்றி, அயல்நாட்டில் வளர்க்கப்பட்ட ஒருவர் என்ன நினைக்கிறார் ?
இந்தியாவுக்கு கடவுள் நம்பிக்கை நல்லதை விட, தீமைகளைத் தான் அதிகமாக செய்திருக்கிறது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.
அந்த நாட்டிலும்...
நான் எந்த நாட்டிலிருந்து இங்கு வந்துள்ளேனோ அங்கேயும் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது. இந்தியாவில் நடப்பது போல, அங்கே கடவுளைப் பற்றி அதிகமாகக் கதை அளப் பதும் இல்லை; கடவுளைப் பற்றி அஞ்சு வதும் இல்லை. எனினும் என்னுடைய நாட்டிலே வாழ்க்கை இனிமையாக நடந்து வருகிறது.நேர்மையும் நல்லன்பும் உள்ள மக்களைத்தான் காணுகின்றேனே தவிர, நயவஞ்சகர்களைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை.
என்னுடைய 17 வயது வரை ஒரு நய வஞ்சக நிகழ்ச்சியையும் நான் அனுபவித்த தில்லை. என்னுடைய நாட்டிலே பையனா, பெண்ணா என்ற கவலையே கிடையாது. உங்கள் மகளின் சீதனத்துக்காக சேமித்து வையுங்கள் உங்கள் மகனின் கல்விக்காக சேமித்து வையுங்கள் என்பது போன்ற விளம்பரம் எதையும் எப்போதும் கண்ட தில்லை. திருமணம் என்பது பணம் சேர்க் கும் சந்தையல்ல. மணமகனையோ, மகளையோ விலை கொடுத்து வாங்குவதில்லை. பழமொழி பேசுவோர் மிகக் குறைவு. போதனை செய்வோர் இல்லவே இல்லை. நல்ல பண்புகள், தூய்மையான வாழ்க்கை ஆகி யவை மீதுதான் கவனம் செலுத்து கிறார்கள்.
வேதனை கலந்த அதிர்ச்சி
நான் முதன் முதலாக இந்தியாவுக்கு வந்தபோது, கடவுளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்து வேதனை கலந்த அதிர்ச்சியடைந்தேன். கடவுளுக்குக் கொடுக்கப்படும் லஞ்சங்கள் (அவற்றைக் காணிக்கைகள் என்று சொல்கிறார்கள்) நேர்மையற்றவர்களின் மத போதனைகள் ஆகியவை என் மூச்சையே நிறுத்தி விட்டன. நான் எப்போதுமே கூர்ந்து நோக்கும் குணமுடையவள். எனவே இங்கே யுள்ள கடவுள் நம்பிக்கையைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். விளைவு? இந்தியாவின் அழிவுக்கு காரணம் இந்து மதத் தத்துவமே என்பதை உணரத் தொடங்கினேன். இந்து மத நூல்களில் பரந்துள்ள அநீதிகளை அறி வாற்றல் உள்ள எந்த மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
மூட நம்பிக்கைகளுக்கு இந்து மதமே ஆதாரம்
ஒரு பெண், ஓர் ஆணின் சொத்து. அவளை அவனுடைய விருப்பம் போல அடிக்கலாம், உதைக்கலாம் என்ற கருத்தை இந்துமதம் நம்புகிறது. எல்லா ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளும் இந்துமத நூல்களி லிருந்து பிறந்தவையே. அந்த மூடநம்பிக் கைகள் வெறும் குப்பைகள் என்பதை இந்திய மக்கள் உணர்ந்து நம்ப வேண்டும் என்பதற்காக என்னாலியன்ற அளவு முயற்சி செய்தேன்.
இந்தியா உணரும்?
கடவுளை வணங்குவது முக்கியமான தல்ல என்பதை இந்தியா என்றேனும் ஒருநாள் உணரும் என்பதை மனப் பூர்வமாய் நம்புகிறேன்.
வாழு, வாழவிடு என்பதைத் தெரிந்து கொள்ளுவதுதான் முக்கியமான செய லாகும். கோவூரைப் போன்றவர்கள் இந்தி யாவுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். குறைவாக வணங்கு; அதிகமாக அன்பு செலுத்து, போதனையைக் குறை, கடைப் பிடித்தலை அதிகமாக்கு; கடவுளை நம்பி யிருத்தலைக் குறைத்துக் கொள்; உன்னுடைய முயற்சிகளின் மீது அதிகமாக நம்பிக்கை வை; மனித இனத்துக்குத் துன்பங்களைக் கொடுத்து விட்டு கோவிலின் பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டு விட வேண் டும்; ஒவ்வொருவரும் நேர்மையான வாழ்க் கை நடத்தவும், சண்டையில் இருப்போரை ஆனந்தமாக வாழச் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
(இந்தியாவிலிருந்து அயல்நாடு ஒன்றில் குடியேறி, மீண்டும் இந்தி யாவுக்கு வந்துள்ள எம்.சாரதா என்பவர் ஜூலை 77 மிர்ரர் ஏட்டில் எழுதியுள்ள கடிதம் இது. தமிழில் தருபவர் தோழர் வீ.து.சச்சிதானந்தன். -ஆர்)வாழு, வாழவிடு என்பதைத் தெரிந்து கொள்ளுவதுதான் முக்கியமான செய லாகும். கோவூரைப் போன்றவர்கள் இந்தி யாவுக்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். குறைவாக வணங்கு; அதிகமாக அன்பு செலுத்து, போதனையைக் குறை, கடைப் பிடித்தலை அதிகமாக்கு; கடவுளை நம்பி யிருத்தலைக் குறைத்துக் கொள்; உன்னுடைய முயற்சிகளின் மீது அதிகமாக நம்பிக்கை வை; மனித இனத்துக்குத் துன்பங்களைக் கொடுத்து விட்டு கோவிலின் பின்னால் ஒளிந்து கொள்வதை விட்டு விட வேண் டும்; ஒவ்வொருவரும் நேர்மையான வாழ்க் கை நடத்தவும், சண்டையில் இருப்போரை ஆனந்தமாக வாழச் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக