திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்புதான் திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தது ஒரு கும்பல். இந்த நிலையில் தற்போது அதே திருப்பூரில் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்தது. பின்னர் கடையில் இருந்த ரூ. 14 கோடி மதிப்புள்ள 45 கிலோ தங்க, வைர நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பி விட்டனர். கடையில் இருந்த அத்தனை நகைகளையும் திருடர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இந்த நகைகளில் 3 கிலோ வைர நகைகளும் அடக்கம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடையையே கொள்ளையர்கள் சூறையாடி விட்டதால் கடை உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக