செவ்வாய், 2 நவம்பர், 2010

Delhi 2010 :செலவு 7000 கோடி வருவாய் 600 கோடியா.

காமன்வெல்த் போட்டியால் கிடைக்கும் வருவாய் ரூ. 600 கோடி மட்டுமே

டெல்லி காமன்வெல்த் போட்டியால் பெருமளவில் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 600 கோடி மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பான்சர் தருவதாக கூறிய பலரும் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டது, டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட மந்தம், பல்வேறு குளறுபடிகள் ஆகியவையே இந்த வருவாய்க் குறைவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்காக போட்டி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு மத்திய அரசு ரூ. 1820 கோடியை தூக்கிக் கொடுத்தது. ஆனால் எதிர்பார்த்த வருவாய் மகா மோசமாக உள்ளது. செலவிட்ட பணத்தில் பாதி கூட திரும்ப வராத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து போட்டி ஒருங்கிணப்புக் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்வே உள்பட பல ஸ்பான்சர்கள் தாங்கள் தருவதாக கூறிய நிதியை இதுவரை தரவில்லை. இவர்கள் சொன்னபடி விரைவில் தங்களது பணத்தைத் தருவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், டிவி உரிமை மூலம் ரூ. 215 கோடியும், ஸ்பான்சர்ஷிப்கள் மூலமாக ரூ. 350 கோடி உள்பட மொத்தம் 600 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

ரயில்வே போட்டிக்காக ரூ. 100 கோடி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை ஒரு பைசாவைக் கூட அது தரவில்லையாம்.
பதிவு செய்தவர்: esspee
பதிவு செய்தது: 31 Oct 2010 6:20 pm
என்னது செலவு 7000 கோடி வருவாய் 600 கோடியா. போச்சே நாட்டு வரி வருவாய் போச்சி. இனி இதை சரிகட்ட இன்னும் வரி போடுவாங்க.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 31 Oct 2010 5:14 pm
வருவாயை விட உலக அளவில் நல்ல பெயரை சம்பாதித்து விட்டோம் இதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வருவாய். ஆரம்பத்தில் கிடைத்த அவப்பெயர் இறுதியில் மரியாதையாக மாறியதே நமக்கு உலக அளவில் கிடைத்த வெற்றி. இந்தியர்கள் ஒன்று பட்டால் நமது தேசத்தை ஊழலில்லா தேசமாக்கலம். இது வரை நடந்ததை மறப்போம் இனியாவது விழிப்போம். அண்டை நாடுகள் நம்மை கூற காத்திருகிறார்கள். அவர்களின் வாயை முடக்குவோம். வாழ்க பாரதம் வளர்க இந்தியா. "ஜெய் ஹிந்த்"

கருத்துகள் இல்லை: