புதன், 3 நவம்பர், 2010

துப்பாக்கி தூக்காத அரசியல் துறைக்கு சிலை வைப்பாம்

(தானாமூனா)
இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் பிரசன்ன கால கட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையுடன் கதைத்ததால் துப்பாக்கியால் பரிசுகளை வழங்கியவர்களில் முதன்மையானவர் இவர். பிரபா -ரணில் 'சமாதான' கால கட்டத்தில் தினமும் புலிகளின் கட்டப்பாட்டில் இருந்த தமிழ் பகுதியில் சராசரியாக தினமொன்றிற்கு 5 பேர்வரை புலிகளால் கொல்லப்பட்டு வந்தனர். புலிகளை கேள்வி கேட்டவர்கள் அல்லது கேள்வி கேட்பார்கள் என்ற கருத்தியல் உடையவர்கள் இவர்களில் பலர். கொலைகள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது அது மக்கள் இயல்பாக பொங்கியெழுந்து செய்யும் செயற்பாடுகள் என்று கொலைகளில் சந்தோஷம் கண்டு நியாயப்படுத்தியவர் இவர். கருணா அம்மான் நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமஷ்டியுடனான அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னதற்காக முந்திக் கொண்டு வந்து தேசியத் தலைவரிடம் மூட்டிக்கொடுத்த கனவான். கருணாவின் பிரிவின் பின்பு  இதன்  தொடர்சியாக ‘கருணாவின் பிரச்சனை தனி நபரின் பிரச்சனை அதனைத் தலைவர் 'தீர்த்து விடுவார்'’ என்று தீர்வை முன்வைத்தவர். இறுதியாக மரணத்தின் முன்பு பூநகரி பகுதி இராணுவக் கட்டளைத் தளபதியாக தரம் 'உயர்த்தப்பட்டு’ கொல்லப்பட்டவர். இவர்தான் சமாதானத்தை விரும்பிய ஆயுத்தில் நம்பிக்கை இல்லாத சமாதானத் தூதுவர். இவருக்கு சிலையாம்...?

கருத்துகள் இல்லை: