வெள்ளி, 5 நவம்பர், 2010

விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது!


புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிய முன்னைநாள் புலி உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள நபர் 35வயதை உடைய ஜேர்மன் பிரஜை ஆவார். Madagascar இல் இருந்து Dusseldorf விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினரின் பெயர் தனிநபர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விடுக்கப்படவில்லை.

2005ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு உதவி புரிந்த இவ் புலி உறுப்பினர் ஜரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இணைத்து அவர்களை தடை செய்த நிலையிலேயே இந்த புலி உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜேர்மன் சட்டத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு உதவி புரிவது குற்றமாகும். ஜேர்மனியில் உள்ள சில தமிழ் அமைப்புகள், சங்கங்கள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளிற்கு ஆதரவு வழங்கி உதவிபுரிந்து வருகின்றன என்றும், கைது செய்யப்பட்ட நபர் அமைப்பாளராக செயற்பட்டு இலங்கையில் உள்ள புலிகளின் செயற்பாடுகளிற்காக அமைப்பாளராக இருந்து செயற்பட்டதுடன் அவர்களது நடவடிக்கைகளிற்கு பொருட்களை அனுப்பி வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள புலி நபர் எவ்வளவு காலம் Madagascar இல் எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதை சட்டத்தரணி தெரிவிக்காதபோதும் கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார்.

கருத்துகள் இல்லை: