கொழும்பு, ஜூன் 26: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமானவரான கே.பத்மநாதனை அரசு தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புகவெல கொழும்பில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார்.
பத்மநாதனை அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு இலங்கை சட்டத்தில் இடம் இருக்கிறது. இதனால் இதுகுறித்து அனைத்துக் கோணத்திலும் அரசு பரிசீலித்து வருகிறது என்று அவர் கூறினார்.
இலங்கையின் சில உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களை கையாளுவது தொடர்பாக பத்மநாதனிடம் ஏதாவது உதவி பெற இயலுமா என்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொத்துக்கள் முழுவதுக்கும் தற்போது பத்மநாதன்தான் பாதுகாவலராக உள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அவர் வசம், 5 கப்பல்கள், 600 வங்கிக் கணக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவை அனைத்தையும் அரசு சொத்தாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக கெகலிய ரம்புகவெல தெரிவித்தார்.
பிரபலமாக "கே.பி' என்று அழைக்கப்படும் கே.பத்மநாதன், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், 1996-ல் இலங்கையில் மத்திய வங்கி மீதான குண்டு வீச்சு சம்பவம், வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் கொள்முதல் செய்து விடுதலைப் புலிகளுக்கு வழங்கியது ஆகியவை தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி.
கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் அந்த அமைப்பின் சர்வதேச பிரிவின் தலைவராக பத்மநாதன் பொறுப்பேற்றார்.
ஆனால் அவரை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விரிவாக விசாரணை நடத்திய பின்னர் விடுவித்தனர்.
ஒரு சில மாதங்கள் அமைதியாக இருந்த பத்மநாதன், உலகம் முழுவதும் வசிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதியை சீரமைக்க உதவுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர்களை தான் ஒருங்கிணைக்கப் போவதாகவும் திடீரென அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் புலிகளின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை அரசுடனான சந்திப்புக்கு அவர் சமீபத்தில் ஏற்பாடு செய்தார். இப்போது அவர் அரசு சாட்சியாக மாறப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

.dinamani -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக