ஞாயிறு, 27 ஜூன், 2010

கலைஞர் உரை: முக்கிய அம்சங்கள்




உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23 ந் தேதி தொடங்கியது. செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்ற  மாலை 4 மணிக்கு  நடந்தது.
மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி மாநாட்டின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

தமிழக முதல்வர் மு. கருணாநிதி நிறைவுப்பேருரை ஆற்றினார்.
அப்போது அவர்,  ’’ஐந்து நாட்களாக கோவையில் நடந்து வரும் இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மூலமாக நமது சொல், செயல் அனைத்தும் தமிழ் தமிழே என்றாகி விட்டது. பார் போற்றும் இந்த மாநாடு நிறைவு கிட்டத்தை எட்டியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள மொழி தமிழ் மொழி. ஆங்கில மொழியின் எழுத்து வடிவம் கி.பி. 7ம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஜெர்மன் மொழியின் எழுத்து வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டைச் சார்ந்தது.

பிரெஞ்சு மொழியின் எழுத்து வடிவம் கி.பி. 9ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இத்தாலி மொழியின் எழுத்து வடிவம் கி.பி. 10ம் நூற்றாண்டைச் சார்ந்தது. தமிழ் மொழி இவற்றிற்கெல்லாம் மூத்த மொழி’’என்று தெரிவித்தார்.
மேலும் அவரின் உரையாற்றும் போது தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அய்யன் திருவள்ளுவர் கூறியதன் மூலம் சமதர்ம நெறியை போற்றிய நாடு தமிழ்நாடு.
2.ரோமானிய நாணயங்கள் கிடைக்கப்பெற்ற பகுதி கொங்கு பகுதி. ரோமானியர்கள் கொங்கு நாட்டு மக்களோடு வாணிபம் புரிந்தார்கள்.

3. தமிழர்களின் கட்டடக்கலையை பறைசாற்றும் கல்லணை, தஞ்சை பெரிய கோயில் ஆகியவை சிறப்பு மிக்கவை.
4. தமிழ் மொழியை செம்மொழியாக சங்க இலக்கியங்கள் படைத்த சங்ககாலப்புலவர்கள், சான்றோர்கள் நினைவு கூறத்தக்கவர்கள்.
5.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த 5 திணைகளை நினைவுபடுத்தும் வகையில் ஐவகை நிலங்களில் மரபணு பூங்காக்கள் அமைக்கப்படும்.

6. தமிழ் மென்பொருள் உருவாக்க ஒன்று பட்டு செயல்படுவோம்.
7. தமிழக பள்ளி கல்லூரி, தமிழ்ச்செம்மொழி பாடங்கள் நடத்த ஆவண செய்யப்படும்.
8. மதுரை மாவட்டத்தில் தொல்காப்பிய உலகத்தமிழ்ச்செம்மொழி சங்கம் அமைக்கப்படும்.
9. குறிப்பிட்ட கால இடைவெளியில் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடத்த ஆவண செய்யப்படும்.
10. திராவிட கலை பண்பாடுகளை காக்க நிரந்தர கண்காட்சி அமைக்கப்படும்.
11 கோவை மாநாடு நெடுகாலம் நிலைத்திருக்க செம்மொழி மாநாட்டு பூங்கா
12 கோவை காந்திபுரம் குறுக்குச்சாலை, சத்தியமங்கலம் சாலை மேம்பாலம் உள்ளிட்ட மேம்பால பணிகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

13. இலங்கையில் முகாம்களில் இருந்து மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்களின் மொழி, இன உரிமைகளை நிலைநாட்டும் வகையில், அவர்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய அரசை, இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.
14. தமிழ் வளர்ச்சிக்கு தனியாக ரூ. 100 கோடி ஒதுக்கப்படும். இதற்கெல்லாம் மத்திய அரசின் உதவி தேவை என்று கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: