ஞாயிறு, 27 ஜூன், 2010

இலத்தின், பாலி போன்ற மொழிகள் வழக்கிழந்து போய்விட்டன. நாம் தமிழில் பேச

தமிழ் வாழ வேண்டும். அது நீடூழி வாழ வேண்டும் என மத்தியதுறை அமைச்சர் பா. சிதம்பரம் கூறியதாக எமது செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார். “இலத்தின், பாலி போன்ற மொழிகள் வழக்கிழந்து போய்விட்டன. நாம் தமிழில் பேச வேண்டும் குறிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர் தமிழில் பேச வேண்டும். நல்ல தமிழ் உள் போது வட்டார மொழி என்ற வழக்கில் அவலட்சணமான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது” என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

விழாவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு அஞ்சல் தலையையும் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் மற்றும் தமிழ் வளர்த்த பேராயர் ரொபர்ட் கால்டுவெல் ஆகியோரின் அஞ்சல் தலைகளையும் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா வெளியிடஇ அவற்றை முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை: