வியாழன், 1 ஜூலை, 2010

8000 சமணரைக் கழுவில ஏத்தினதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்.?

திரு ஞான  சம்பந்தருக்கு என்ன தான் நடந்தது

சண்முகம்: இந்த நாயன்மாற்றை கதைகள வாசிச்சாச் சரியான பயங்கரமாயிருக்கப்பா.
சரவணன்: ஏன் என்ன?
சண்முகம்: பிள்ளைக் கறி சமைக்கிறதும், கண்ணப்பிடுங்கி அப்பிறதும் பயங்கரமாயிருக்கு.
சரவணன்: அது பக்தியாலதான் அப்பிடிச்செய்யினம்.
சண்முகம்: அது சரி அப்ப எண்ணாயிரம் சமணரைக் கழுவில ஏத்தினதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள். ஒரு நூறா இரு நூறா எண்ணாயிரமப்பா எண்ணாயிரம்.
சரவணன்: சரியா வாசிச்சீங்களா?
சண்முகம்: பின்ன, எண்ணாயிரம் சமணரை திரு ஞானசம்பந்தர் கழுவில ஏத்தினார் எண்டு கிடக்கு.
சரவணன்:திரு ஞானசம்பந்தரா?
சண்முகம்: அது தான் விளங்கேலை. சிவபெருமானாலை திருமுலைப்பால் ஊட்டப்பட்ட திரு ஞானசம்பந்தர் என்னெண்டு இவ்வளவு பெரிய massacre ஐச் செய்தாரெண்டு தான் விளங்கேலை.
சரவணன்:திரு ஞானசம்பந்தர் தான் செய்தாரோ இல்ல வேறயாரும் செய்திட்டு அவரில சாட்டினன்களோ.
சண்முகம்: யாருக்குத் தெரியும்? எத்தினையோ நூற்றாண்டுகளுக்கு முதல் நடந்தது.
சரவணன்: இப்பச் சொல்றாங்களெல்லா ஏசுநாதர் உண்மையிலை கல்யாணம் முடிச்சவர். அதை பைபிளிலை மறைச்சுப்போட்டினமெண்டு.
சண்முகம்: என்ன புதுக்கத பேசிறாய்? எங்க வந்தது அப்பிடி?
சரவணன்: அதான் கொஞ்சநாளுக்கு முதல் பெரிசா அடிபட்டுதே 'Da Vinci Code' எண்ட புத்தகத்தில அப்பிடித்தான் எழுதியிருக்கு. அதுக்குப் பெரிய எதிர்ப்பும் வந்ததே தெரியாதா? எந்த உலகத்தில இருக்கிறாய்?
சண்முகம்: அப்பச் சரித்திரம் ஒண்டையும் நம்பஏலாதெண்டு சொல்லு.
சரவணன்: இப்ப திரு ஞானசம்பந்தரிட விஷயத்துக்கு வருவம். நான் நெக்கிறன் சம்பந்தர் பிராமணரா இருந்தாலும் இவையிட வழிக்கு வரேல்ல. அவ்வளவு பாட்டும் தமிழிலை தானே பாடியிருக்கிறார் சமஸ்கிருதத்திலை பாடேல்லயே. அப்ப அவர் தமிழை வளர்த்திருக்கிறார். அவர் ஒரு பெரிய மகானாயிருந்திரிறார். அவர் கொண்ட எண்டு போட்டா எந்தக் குறையும் வராதெண்டு இந்தப் பிராமணிகள் அவர் தான் கழுவில ஏத்தினார் எண்டு சரித்திரத்தை மாத்திப் போட்டாங்கள்.
சண்முகம்: கொஞ்சம் பொறு. அவர் கல்யாணம் முடிக்கப் போகும் போது தானே பெரிய சோதி தோன்றி அவருடன் அந்தத் திருமணத்துப் போயிருந்த அனைவரையும் விழுங்கிக் கொண்டது என்பதும் ஏன் அவர் கல்யாணம் முடிப்பதை விரும்பாத யாரும் அப்படியே கல்யாண மண்டபத்துக்கு நெருப்பு வைத்து விட்டு சோதி வந்தது என்று ரீல் விட்டதாயிருக்கேலாது. அந்த நாளேல சீமெந்துக் கட்டிடமாயிருந்திருக்காது தானே ஈஸியா நெருப்புப் பிடிச்சிருக்கும்.
சரவணன்: நான் அப்பவே நெச்சனான் அவர் தான் பெரிய நாயனார். அவர் சோதியில் கலந்தாரென்றால் ஓகே. ஆனால் கல்யாணத்துப் போயிருந்த எல்லாருமா அவ்வளவு புண்ணியம் செய்தவர்கள் எல்லோரும் சோதியில் கலக்க எண்டு.
சண்முகம்: Mass killing. சாட்சியில்லாம எல்லாரையும் அனுப்பியாச்சுது.
சரவணன்: நீ சொல்லிறது சரியாப் பொருந்துது.


திரு ஞானசம்பந்தரின் வரலாறு பற்றிய ஒரு ஆய்வு கட்டுரை ஒன்றை இணையத்தளம் ஒன்றில் படித்தேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் யாரைய்ஜ்ம் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை. யாம் பெற்ற தகவல்கள் தாங்களும் பெறவேண்டும் என்ற நல்நோக்கதிதில் இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ஆயிரம் கருத்துகள் ்ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம். பாரதி தாசன்.
www.mayakam.blogspot.com

கருத்துகள் இல்லை: