ஞாயிறு, 27 ஜூன், 2010

கூட்டுக்கள் கொள்கை அடிப்படையில் ஏற்படவேண்டும்,சுரேஷ்


 எங்கே ஒற்றுமை ஏற்பட்டுவிடுமோ என்று சிங்களவன் பயப்படவில்லை ஆனால் இவர் பயப்படுகிறார்.
ஒற்றுமை வந்துவிட்டால் எங்கே தன் முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயந்து தானே சக போராளிகளை உமது லேட்டஸ்ட் தலைவர் கொன்றார்? அந்த வியாதி அந்த பயம் அதாவது ஒற்றுமையை கண்டால் ஏற்படும் பயம்,
ஆஹா வந்துட்டாங்க அய்யா வந்துட்டாங்க

ஒற்றுமையை பார்த்துப் பயந்துதானே ஸ்ரீ சபா வை கொன்னாங்க உமது பத்மனாபைவையும் கொன்னாங்க ராஜீவ் காந்தியைரும் கொன்னாங்க. இப்ப எல்லா என்சினவங்களும் சேர்ந்து எவன் கொன்னவனோ அவனது காலின் கீழ் ஒண்ணா இருந்து பதவி பெற்று, ஆஹா புல்லரிக்குது தம்பி/ தோழர் சுரேஷின் கொள்கை முழக்கத்தை கேட்டு.
முன்னொரு காலத்தில் பாட்டாளி வர்க்கம என்று எதோ எல்லாம் சொன்ன மாக்சிய வாதிகள் எல்லாம் தற்போது கொள்கை என்ற ஒரு சொல்லையாவது ஞாபகம் வைத்திருப்பதற்கு தாங்க்ஸ்.
இனி சுரேஷின் கருத்துக்களை படியுங்கள்

தற்சமயம் திடீரென ஒன்றுகூடியுள்ள தமிழ்க் கட்சிகள் எம்முடன் என்ன விடயங்கள் தொடர்பாக பேச விரும்புகிறார்கள், எண்ணுகிறார்கள் என்பதனை அறிவித்தால் அவர்களுடன் பேசுவது குறித்து கூட்டமைப்பு ஆராய்ந்து முடிவு செய்யும். என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எதிர்வரும் முதலாம் திகதி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் இடம்பெறும் என்றும் அக்கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
அது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இந்தக் கூட்டத்துக்கு இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை. எம்முடன் என்ன விடயங்கள் குறித்து அவர்கள் (ஏனைய கட்சியினர்)  பேச ஆர்வமாக உள்ளார்கள் என்ற விவரங்களை எமக்கு அறிவித்தால் அவை தொடர்பாக எமது கூட்டமைப்பு கூடி முடிவு செய்யும்.
கூட்டுக்கள் கொள்கை அடிப்படையில் ஏற்படவேண்டும். வெறும் சுயநலத்துக்காக கூட்டுக்கள் ஏற்படக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்க்கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி எடுத்தனர்.
இதற்காக சுவிஸில் சகல தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்று கூட்டினர். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஈ.பி.டி.பி. சுயநிர்ணயத்தை ஏற்கமுடியாது என்று உறுதிபடக்கூறிவிட்டது.



கருத்துகள் இல்லை: