வெள்ளி, 2 ஜூலை, 2010

திருமாவளவன் குற்றச்சாட்டு, இதற்கு முன்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டது கிடையாதா? என்று

தேர்தலை மனதில் வைத்து முழு அடைப்பு நடத்துகிறார்கள் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு மாவட்ட கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிக மிக முக்கியம் ஆகும். இதனை விடுதலைச்சிறுத்தை கட்சி வரவேற்கிறது. அப்போது தான் மக்கள் தொகை அடிப்படையில் அவர் அவருக்கு சமூக நீதி கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயரும் போது மத்திய அரசு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு காரணமாக தான் விலை உயர்வு ஏற்படுகிறது என்று கூறி வருகிறது. இதனை சமாளித்து சாதாரண மக்கள் வாங்கும் சக்தியை கொண்டு வந்து விலைவாசி கட்டுபடுத்துவது அரசின் கடமையாகும்,

உடனடியாக பெட்ரோல், டீசல், மண்எண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திருப்பபெற வேண்டும், வருகிற 5 ந்தேதி பா.ஜ.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் எதிர் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு தான் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறது. இதற்கு முன்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டது கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: